ஜெய்ஷ்வால் அதிரடி சதம்.. ராஜஸ்தான் அபார வெற்றி! கேட்சுகளை கோட்டைவிட்டு தோற்ற மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

1 /7

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 38வது ஐபிஎல் போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.  

2 /7

அந்த அணியில் திலக் வர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 5 சிக்சர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். நபி 23 ரன்கள் எடுக்க, நேகல் வதேரா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.   

3 /7

அவர் 3 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் விளாசினார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் சர்மா அபாரமாக பந்துவீசினார். காயத்தில் இருந்து மீண்டு வந்து இப்போட்டியில் களம் கண்ட அவர் 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.   

4 /7

டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இப்போட்டியில் ஒரு விக்கெட் எடுத்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் யுஸ்வேந்திர சாஹல்.   

5 /7

இதனையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஓப்பனிங் இறங்கிய பட்லர் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானாலும், மறுமுனையில் இருந்த ஜெய்ஷ்வால் அதிரடியாக ஆடினார்.  

6 /7

அவர் இந்த ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதத்தை நிறைவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதில் 7 சிக்சர்களும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.   

7 /7

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு மிக முக்கிய காரணம், அந்த அணி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோரின் கேட்சுகளை கோட்டைவிட்டது. இந்த கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தால் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் பக்கம் திரும்பியிருக்கும்.