ஆர்வ கோளாறுல அதிக விட்டமின் மாத்திரை சாப்பிடாதீங்க.. பேராபத்தை ஏற்படுத்தும்!

உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும் போது அதன் உணவு மூலமாகவும், சப்ளிமெண்ட் மாத்திரைகள் வடிவிலும் அதனை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. 

அனைத்து ஊட்டச்சத்துக்களைப் போலவே, வைட்டமின்களும் நம் உடலுக்கு மிகவும் முக்கியம்.  விட்டமின்கள் குறைபாடு ஏற்படுவது நல்லதல்ல. குறைபாடு காரணமாக பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

1 /7

உடலில் வைட்டமின்கள் குறைபாட்டினை போக்க எடுத்துக் கொள்ளும் சப்ளிமெண்ட் மாத்திரைகள், அளவிற்கு அதிகமானால், உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

2 /7

உணவுகள் மூலம் இயற்கையாக வைட்டமின்களை உட்கொள்ளும் போது, ​​அதிக அளவில் சாப்பிட்டாலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அதன் செறிவூட்டப்பட்ட அளவை சப்ளிமெண்ட்ஸ் அதாவது மாத்திரைகள் வடிவில் உட்கொள்ளும்போது, ​​அதிகப்படியான அளவினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.

3 /7

அதிகப்படியான வைட்டமின் ஈ (Vitamin E) சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்டால், அது இரத்தம் உறைதல், ரத்தக்கசிவு மற்றும் ஹெமோர்ஹாஅஜிக் ஸ்ட்ரோக் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

4 /7

வைட்டமின் D  (Vitamin D) சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான நச்சுத்தன்மை எடை இழப்பு, பசியின்மை மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகரித்தல் உள்ளிட்டபாதிப்புகள் ஏற்படும். இது இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும்.

5 /7

வைட்டமின் சி (Vitamin C) மற்ற ஊட்டச்சத்துக்களை விட குறைவான நச்சுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, வயிற்றுப்போக்கு, வாந்தி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

6 /7

அதிகப்படியான விட்டமின் A (Vitamin A) மாத்திரைகள் காரணமாக, நச்சுத்தன்மை, அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ ஆகியவை ஏற்படலாம். இதற்கான அறிகுறிகளில் வாந்தி, அதிகரித்த உள்விழி அழுத்தம் ஆகியவை அடங்கும்.

7 /7

வைட்டமின் B12 ( Vitamin B12) ஐ அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும், அது சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேறும். இருப்பினும், தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும்.