வீட்டில் வைக்கக்கூடாத செடிகள்: வாஸ்து சொல்லும் இதை வீட்ல வைச்சா, நிலைமை மோசமாயிடும்

Unlucky Plants By Vastu: வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய விஷயங்களைப் புறக்கணிப்பது ஒரு நபருக்கு நேரடி விளைவைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. 

வாஸ்து சாஸ்திரத்தில், துரதிருஷ்டத்தைக் கொண்டு வரும் சில தாவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றை வீட்டில் வைத்தால் துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று எச்சரிக்கப்படுகிறது.

(பொறுப்புத்துறப்பு: இவை பொது நம்பிக்கைகள், வாஸ்து சாஸ்திரத்தின்படி எழுதப்பட்டது. இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது)

1 /7

வீட்டில் வைக்கப்படும் பொருட்களால், வீட்டில் எது போன்ற மாறுதல்கள் நடக்கும் என்பதை வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய விஷயங்களைப் புறக்கணிப்பது ஒருவருக்கு நேரடி விளைவைக் கொடுக்கும். சில செடிகளை வீட்டில் வளர்த்தால், அது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைத் தரும்.  

2 /7

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கள்ளிச்செடி, வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். இலைகளில் உள்ள முட்கள் மற்றும் கூர்மையான முட்கள் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு செல்வதாக நம்பப்படுகிறது. எனவே, இது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும், குடும்பத்தில் பதற்றம் மற்றும் கவலையையும் தருகிறது.

3 /7

குளிர்காலத்தில் வைக்கப்படும் பருத்தி செடிகள் மிகவும் அழகாக இருக்கும், ஆனால் அதை வீட்டில் வைத்திருப்பது அதிர்ச்தத்திற்கு விடை கொடுத்து அனுப்புவதாக கருதப்படுகிறது. வாஸ்துவின் படி பருத்தி செடிகளை வீட்டிற்குள் வைத்திருப்பது கெட்ட செய்திகளை கொண்டு வரும்.  

4 /7

போன்சாய் செடிகளை வீட்டில் வைக்க வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கவில்லை. பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தாலும், வீட்டில் வைக்கக் கூடாது. இது உங்கள் வாழ்க்கை சுழற்சியை சீர்குலைக்கிறது, தாவரத்தின் வளர்ச்சியைத் தடுத்து வைக்கப்படும் இந்த செடி, உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தை தடுத்துவிடும்.

5 /7

புளியமரம் அசுபமாக கருதப்படுகிறது, அவை தீய சக்திகளின் இருப்பிடமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. வாஸ்து வல்லுநர்கள் புளிய மரத்திற்கு அருகில் வீடு வாங்குவதையோ அல்லது கட்டுவதையோ ஊக்குவிப்பதில்லை. புளியமரம் வீட்டிற்கு அருகில் இருந்தால், வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

6 /7

அரச மரம் கோவில்களில் அதிகம் காணப்படுகின்றன, ஆனால் அதை உங்கள் வீட்டில் நடக்கூடாது. உங்கள் வீட்டில் அரச மரம் வளர்ந்தால், அதைப் பிடுங்கி நட வேண்டும். ஏனெனில் அரச மரத்தை வீட்டில் இருந்தால் பண இழப்பு ஏற்படும்

7 /7

பனை மரத்தை வீட்டில் வைக்கக்கூடாது, அது எல்லாவிதத்திலும் கெடுதலைத் தரும் என வாஸ்து கூறுகிறது