சுகர் லெவலை குறைக்க சூப்பரான வழி... இந்த காய்களை சாப்பிடுங்க போதும்

Diabetes Diet: நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒரு நோயாக உள்ளது. இது இன்னும் பல நோய்களுக்கும் காரணமாகிறது.

மோசமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு, நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது, உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வரக்கூடும். உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மக்கள் பெரும்பாலும் பல வகையான மருந்துகளை உட்கொள்கிறார்கள். ஆனால் இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் மருந்துகளை உட்கொள்வதோடு, நீரிழிவு நோயில் உணவு முறையிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

பாகற்காயில் சுகர் லெவெலை உடனே குறைக்கும் அம்சங்கள் பல உள்ளன. நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பது நல்லது. இதில் பாலிபெப்டைட் மற்றும் வைசின் போன்ற கூறுகள் உள்ளன. இது உங்கள் திசுக்கள் சர்க்கரையைப் பயன்படுத்தும் முறையை மேம்படுத்துகிறது. இது இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது.

2 /8

வெந்தயக்கீரையை உட்கொள்வதால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். வெந்தயம் குடல் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைத்து இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையை உறிஞ்சுவதை ஒழுங்குபடுத்துகிறது. 

3 /8

கீரையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகாது. எனவே, கீரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்காது. இதில் இருக்கும் பிற ஊட்டச்சத்துகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

4 /8

நெல்லிக்காயில் அதிக அளவில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து நச்சுக் குவிப்பைத் தவிர்க்கிறது. 

5 /8

மஞ்சள் மற்றும் அதன் மூலப்பொருள் குர்குமின் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மஞ்சள் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். மேலும் இது எடை அதிகரிப்பதைத் தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6 /8

குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக, சியா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவுத் தேர்வாகும். உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களிலும் சியா விதைகளால் நன்மை கிடைக்கும். 

7 /8

வெண்டைக்காய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தேவையான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட காயாக உள்ளது.

8 /8

தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் புரதம், கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகளை மிகுதியாக வழங்குகிறது. மேலும், இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.