Year Ender 2021: OTT இந்த ஆண்டின் சிறந்த இந்திய நடிக நடிகைகள்

2021ம் ஆண்டிலும் கொரோனா குறைவதற்கான அறிகுறிகள் இல்லை. இரண்டாவது அலை மற்றும் லாக்டவுன் என மக்கள் வீடுகளில் முடங்கினாலும்,  OTT பொழுதுபோக்கை கொடுத்து ஆசுவாசப்படுத்தியது.  2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் என பாராட்டப்பட்ட திரையுலகினரின் புகைப்படத் தொகுப்பு...

1 /6

ஆதர்ஷ் கவுரவ் OTT இல் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்தார், ஆனால் 'தி ஒயிட் டைகர்' படத்தில் அவரது நடிப்பு சர்வதேச அளவில் புகழ் பெற்றுத் தந்தது. (Photograph:Twitter)

2 /6

உமேஷ் பிஷ்ட்டின் ‘பக்லைட்’ படத்தில், துக்கத்தில் இருக்கும் குடும்பத்தின் மத்தியில் கணவனின் மரணத்தை சமாளிக்க முயற்சிக்கும் இளம் பெண்ணின் கதாபாத்திரத்திற்கு அருமையாக வெளிப்படுத்தியிருந்தார் சான்யா மல்ஹோத்ரா (Photograph:Twitter)

3 /6

இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது திறமையான சமந்தா ரூத் பிரபு. 'ஃபேமிலி மேன் 2' இல் பயங்கரவாத அமைப்பில் பெண் உறுப்பினராக அவர் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார். (Photograph:Twitter)

4 /6

கார்கில் மாவீரன் கேப்டன் விக்ரம் பத்ராவை அடிப்படையாகக் கொண்ட ‘ஷெர்ஷா’ என்ற திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். (Photograph:Twitter) 

5 /6

தலித் ஓரினச்சேர்க்கை பெண்ணாக சிக்கலான கதாபாத்திரத்தையும் கொங்கோனா சென் ஷர்மா சிறப்பாக நடித்திருந்தார். ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ தொகுப்பில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. (Photograph:Twitter)

6 /6

வித்யா பாலனால் செய்ய முடியாத வேடம் ஏதும் உண்டா? அமித் மசுர்கரின் 'ஷெர்னி'யில், பாலன் ஆணாதிக்கம், பெண் வெறுப்பு மற்றும் ஒரு மனிதனை உண்ணும் புலி ஆகியவற்றை எளிதாக எதிர்கொண்டு பெண் புலி என்ற பாராட்டையும் பெற்றார். (Photograph:Twitter)