புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்ட ஆளுநர் மாளிகை

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, ஆளுநர் மாளிகை 48 மணிநேரம் மூடப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 07:02 AM IST
  • கொரோனா பாதிப்பால் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்ட புதுச்சேரி ஆளுநர் மாளிகை
  • புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1200ஐ நெருங்கிவிட்டது
  • பாதுகாப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காட்டம்
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் 48 மணி நேரத்திற்கு மூடப்பட்ட ஆளுநர் மாளிகை title=

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, ஆளுநர் மாளிகை 48 மணிநேரம் மூடப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேச ஆளுநர் கிரண் பேடி உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதுடன், பரப்பளவில் சிறியது என்பதால் அங்கு சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1200ஐ நெருங்கிவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் மாளிகை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Read Also | 2020 JULY 09: உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு

இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில்  கடைகளும் சந்தைகளும் கொரோனா தொற்றுநோய் மையங்களாக மாறி வருகின்றன என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதுபற்றி பேசிய துணைநிலை ஆளுநர்,``கொரோனா அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ததில், இங்கு கடைகள் விழிப்புணர்வின்றி செயல்பட்டு வருகின்றன. அதேபோல முகக்கவசம் அணிந்துகொண்டு, தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருட்கள் விற்கவேண்டும்.  இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத கடைகளை அரை நாள் மூடப்படுவதுடன், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடர வேண்டும். புதுச்சேரியில் தற்போதைய கொரோனா பரவல் விகிதம் அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் கடும் நடவடிக்கைகள் எண்டுக்க வேண்டும்” என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Trending News