IPL 2018: டெல்லி-ன் வெற்றி கனவை சிதைத்த பெங்களூரு!

IPL 2018 தொடரின் 19-வது ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றது.

Last Updated : Apr 22, 2018, 07:20 AM IST
IPL 2018: டெல்லி-ன் வெற்றி கனவை சிதைத்த பெங்களூரு! title=

IPL 2018 தொடரின் 19-வது ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றது.

IPL 2018 தொடரின் 19-வது ஆட்டத்தில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள்  பெங்களூருவில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் தடுமாறிய டெல்லி அணி தொடக்க ஆட்டகாரர்களை அடுத்தடுத்து இழந்தது, எனினும் அணியின் ரிஸாப் பான்ட் 85(48), ஸ்ரேயஸ் ஐயர் 52(31) என அதிரடியாக ரன்களை குவித்தனர். இதனால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. எபிடி வில்லியர்ஸ் மட்டம் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர் 39 பந்துகளில் 90 ரன்களை குவித்து ஆட்டத்தின் வெற்றியினை உறுதிசெய்தார்.

எனவே ஆட்டத்தின் 18-வது ஓவரிலேயே பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 176 ரன்கள் குவித்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது...

Trending News