பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதை

தொலைந்து போன நகரமான பண்டைய அட்லாண்டிஸின் பாதைக்கு இணையாக ஒரு மர்மமான மஞ்சள் பாதை கண்டுப்பிக்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2022, 01:48 PM IST
  • கடலுக்குள் அற்புதம்
  • இயற்கை பாறைகளின் அதிசயம்
  • சமுத்திரத்திற்குள் பாதையா
பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதை title=

பசிபிக் பகுதியில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலவித வரலாற்று ரீதியிலான கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையை கண்டுபிடித்துள்ளனர், தற்போதைய உலகில் இல்லாத, தொலைந்து போன நகரமான பண்டைய அட்லாண்டிஸின் பாதைக்கு இணையாக இது இருக்கலாம் என்று நம்பும்படி இது அமைந்துள்ளது.

ஆழ்கடல் பயணத்தின் நேரடி காட்சிகள், கடந்த மாதம் ஆன்லைனில் எக்ஸ்ப்ளோரேஷன் வெசல் நாட்டிலஸ் குழுவினரால் வெளியிடப்பட்டது, விசித்திரமான தோற்றமுடைய இந்த பாதை பலரின் கவனத்தை ஈர்க்கிறது.

இந்தக் காட்சிகள், கற்களால் அமைக்கப்பட்ட சாலையை ஒத்த விசித்திரமான தோற்றமுடைய அமைப்பைக் காட்டியது. ஆராய்ச்சியாளர்கள் அதை "மஞ்சள் செங்கல் சாலை" மற்றும் "அட்லாண்டிஸுக்கு செல்லும் சாலை" என்று விவரித்தனர்,

மேலும் படிக்க | கடல் விவசாயத்தில் புரட்சி; இந்திய ஸ்டாட்-அப் நிறுவனத்தின் அற்புத தயாரிப்பு!

ஒரு திட்டமிட்ட சாலையைப் போல அமைந்திருக்கும் இந்தப் பாதை, நம்பமுடியாத பாறை உருவாக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஹவாய் தீவு அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள Papahanaumokuakea Marine National Monument  கடல் தேசிய நினைவுச்சின்னத்தில் (PMNM) உள்ள லிலியுகலானி ரிட்ஜில் கண்டுபிடிக்கப்பட்டது.

PMNM என்பது உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான முழுமையான பாதுகாக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதி ஆகும். PMNM பகுதிகள் பசிபிக் பெருங்கடலின் 582,578 சதுர மைல்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவில் உள்ள அனைத்து தேசிய பூங்காக்களின் பரப்பளவைவிட மிகவும் பெரிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, ஆராய்ச்சியாளர்கள் அதன் கடற்பரப்பில் மூன்று சதவீதத்தை மட்டுமே ஆய்வு செய்துள்ளனர் என்பது இதன் பிரம்மாண்டத்தை விவரிக்க போதுமானதாக இருக்கும்.

டெய்லி மெயில் பத்திரிக்கையில் "இது அட்லாண்டிஸுக்கான பாதை" என்று ஒரு ஆராய்ச்சியாளர் சொல்வதாக கூறப்பட்டுள்ளது. "மஞ்சள் செங்கல் சாலை?" என்றும் இது அழைக்கப்படுகிரது. "வினோதமான சாலை இது"  என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | இதுதான் பேய் சுறாவா? கடலில் இருந்து கிடைத்த அரிய வகை உயிரினம்

'மஞ்சள் செங்கல் சாலை' என்ற இந்த சாலை அமைப்பு, செயலில் உள்ள எரிமலை புவியியலுக்கு ஒரு உதாரணம் என்றும், இது மிகவும் பழமையானது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்ட ஆய்வுக் குழு, "பாபஹானமோகுவாக்கியா கடல் தேசிய நினைவுச்சின்னத்திற்குள் உள்ள லிலியுகலானி ரிட்ஜில் டைவிங் செய்யும் போது நம்பமுடியாத தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான புவியியல் அமைப்புகளைக் கண்டறியப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

'சீமவுண்ட் சங்கிலி முழுவதும், குழு பல்வேறு ஆழங்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டல்களில் இருந்து ஃபெரோமாங்கனீஸ் (இரும்பு-மாங்கனீசு) மேலோடு பூசப்பட்ட பாசால்ட்களையும், அதே போல் கிட்டத்தட்ட ஒரு கடற்பாசியை ஒத்த ஒரு சுவாரஸ்யமான தோற்றமுடைய பியூமிஸ் பாறையையும், இங்கிருந்து மாதிரியாக எடுத்து வந்திருக்கிறது எங்கள் டைவர்ஸ் குழு' என்று ஆய்வுக்குழு கூறுகிறது.

இந்த ஆய்வுக் கப்பலை லாப நோக்கற்ற கடல் ஆய்வு அறக்கட்டளை இயக்குகிறது, இது தொலைதூரத்தில் இயக்கப்படும் டைவிங் வாகனங்கள் ஆழத்தில் பார்ப்பதை நேரடியாக ஒளிபரப்புகிறது.

மேலும் படிக்க | சூப்பர் காய் சுரைக்காய்: சம்மரை கூலாய் கழிக்க சூப்பரா உதவும் சுரைக்காய் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News