800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீனின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையில் இருந்து எக்ஸ் ரேகதிர்களை பகுப்பாய்வு செய்யும் போது, ஒரு விசித்திரமான வடிவம் இருப்பதை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த கதிர்களை பிரபஞ்சத்தில் வெளியேற்றுவது கருந்துளை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நிகழ்வை விளக்கும் விஞ்ஞானிகள், கருந்துளைகளில் வாயு அதிவேகமாக உள்ளே நுழையும் போது எரிப்பு ஏற்பட்ட பின்னர், அதிலிருந்து எக்ஸ்-ரே கதிர்வீச்சு ஏற்படலாம் என்று அனுமானிக்கின்றனர்.
கருந்துளையில் வாயு நுழையும்போது ஏற்படும் எரிப்புகள் நின்ற பிறகு குறுகிய எக்ஸ்ரே ஃப்ளாஷ்கள் காணப்பட்டன. வட்டின் வெளிப்புற விளிம்பில் இருந்து எரியும் பிரதிபலிப்பு இந்த ஃப்ளாஷ்களுடன் பொருந்தியது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!
இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள டான் வில்கின்ஸ்,, பல உற்சாகமூட்டும் ஆனால் அடிக்கடி திகைப்பூட்டும் எக்ஸ்-ரே கதிர்கள் வெளியேற்றத்தைக் கண்டார். மற்ற எக்ஸ்-ரே ஃப்ளாஷ்களின் திடீர் தோற்றம் தொலைநோக்கிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ஏனெனில் அவை பின்னர், சிறியதாகவும், சக்திவாய்ந்த எரிப்புகளை விட வேறுபட்ட "வண்ணங்களை" கொண்டிருந்தன.
இந்த கண்கவர் எதிரொலிகள், கருந்துளையின் நிழலில் இருந்து பிரதிபலிக்கும் எக்ஸ்-கதிர்களுடன் ஒத்துப்போகின்றன என்பது ஆச்சரியமானதாக இருக்கிறது. கருந்துளைக்குள் எந்த ஒளியும் ஊடுருவாது என்பதால், கருந்துளைக்குப் பின்னால் உள்ள எதையும் நம்மால் கண்டறிய இயலாது என்று வில்கின்ஸ் கூறுகிறார்.
வில்கின்ஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள காவ்லி இன்ஸ்டிடியூட் ஃபார் பார்ட்டிகல் அஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் அண்டவியல் மற்றும் SLAC நேஷனல் ஆக்சிலரேட்டர் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார்.
மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்
ஆனால் கருந்துளையின் மற்றொரு அசாதாரண பண்பு இந்த கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியது. "அந்த கருந்துளை விண்வெளியை முறுக்குகிறது, தன்னைச் சுற்றி ஒளி மற்றும் காந்தப்புலங்களை வளைக்கிறது" என்று வில்கின்ஸ் தொடர்ந்தார்.
கருந்துளையிலிருந்து நேரடியாக வரும் ஒளியின் முதல் நேரடிக் கண்டறிதல் இதுவாகும், இது ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு பரிந்துரைத்த விஞ்ஞான அனுமானம் ஆகும். ஆனால் இதற்கு முன் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் இந்த அம்சம் நிரூபிக்கப்படவில்லை.
சில கருந்துளைகளின் புதிரான குணாதிசயமான அம்சங்களை புரிந்துகொள்வதே இந்த ஆராய்ச்சியின் ஆரம்ப இலக்காக இருந்தது. ஆனால் ஆராய்ச்சி ஆச்சரியமான பல விஷயங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளது.
மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe