சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது. இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது தமிழக வீரர் அஸ்வின் களத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
Ashwin doing #VaathiComing dance in the ground and giving his presentation ceremony speech in Tamil was soo soo good to watch. Thanks for showing them India isn't just Hindi.
Ya only Tamilians can do this. Thamizh vaazgai :)#INDvsENG
— Puncturewala (@mallucomrade) February 16, 2021
நேற்று அஸ்வின் சதம் அடித்ததும் குட்டி ஸ்டோரி என்ற வார்த்தை இணையம் முழுக்க வைரலானது. அஸ்வினை பலரும் மாஸ்டர் என்று புகழ தொடங்கினார்கள். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருக்கும் அஸ்வினை, அந்த அணி மாஸ்டர் படத்தின் போஸ்டரில் வைத்து எடிட் செய்து வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Vaathi came, Vaathi conquered
Ash Anna teaching 'em how it's done on a raging turner at the Chepauk #INDvENG #Master @ashwinravi99 pic.twitter.com/hpO8lMCl5M
— Delhi Capitals (@DelhiCapitals) February 15, 2021
அஸ்வின் இன்று மைதானத்தில் மாஸ்டர் படத்தின் பாடலுக்கு நடனம் ஆடியது ஒருசில விநாடிகளே என்றாலும் அது பாப்புலராகிவிட்டது. கையை ஆட்டி விஜய் ஆடும் அதே பிரபல ஸ்டெப்பை அஸ்வின் ஆடினார், அந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Also Read | அஸ்வினின் சதமும், முகமது சிராஜின் கொண்டாட்டமும்…
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பல்வேறு வகைகளிலும் பிரபலமாகி இருக்கிறது. இதற்கு முன்பு மாஸ்டர் படத்தை பாருங்கள் என்று சக வீரர் ரஹானேவிற்கு அஸ்வின் பரிந்துரை செய்திருந்தார். சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் வென்ற பின் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட தமிழக வீரர்கள் இதேபோல் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஸ்வின், நடராஜன் என தமிழக வீரர்கள் கிரிக்கெட் மைதானத்தில் தமிழில் பேசுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் சிட்னி போட்டிக்கு பிறகு நடராஜன் தமிழில் பேசியதும் வைரலானது.
Also Read | IND vs Eng: இங்கிலாந்தை வீழ்த்தி 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR