தனது ஜோடிப் பாம்பின் கொலைக்கு புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாம்பு

பாம்பு பழி வாங்கும் என்பது உண்மையா? கொலைக்கு புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாம்பு, வெலவெலத்துப் போன போலீசார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 21, 2021, 08:41 PM IST
  • பாம்பு பழி வாங்கும் என்பது உண்மையா?
  • கொலைக்கு புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாம்பு
  • தனது ஜோடியை கார் ஏற்று கொன்றதற்கு புகார் கொடுத்ததா நாகப்பாம்பு?
தனது ஜோடிப் பாம்பின் கொலைக்கு புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பாம்பு  title=

புகார் கொடுக்க காவல்நிலையத்திற்கு செல்வது வழக்கமான நடைமுறை. ஆனால், யார் செல்கிறார்கள், எதற்காக செல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது. 

விநோதமான ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம அசம்கரில் நிகழ்ந்துள்ளது. பாம்பு ஒன்றை சென்று கொண்டிருந்த கார் நசுக்கிக் கொன்றது. அதன்பிறகு மற்றொரு பாம்பு, காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுவிட்டது. இது ராமநாராயணம் திரைப்படக் கதையல்ல! உண்மையில் நடைபெற்ற சம்பவம்… 

இந்த வினோதமான சம்பவம் இன்று வைரல் செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் பாம்பு என்றால் படையும் நடுங்குகிறது.  

சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளிப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பலரும் ஏதோ ஒரு காரணத்திற்காக புகார் அளிப்பதற்பாக வந்திருந்தனர். அப்போது அங்கு ஜோடி பாம்புகள் சற்றுத் தொலைவில் இருந்தன.

Also Read | மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!

காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஒருவர் காரில் கிளம்பியபோது, கார் பாம்பின் மீது ஏறியதில், அது அங்கேயே உயிரிழந்தது. வேகமாக சென்றக் காரை மற்றொரு பாம்பு துரத்திச் சென்றது. வேகமாக சென்ற காரை பாம்பு துரத்திக் கொண்டே சென்றுவிட்டது.

பாம்பு சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட சிலர், காவல் நிலையம் அருகே குழி தோண்டி புதைத்துவிட்டனர். மற்றொரு பாம்பு இனிமேல் இங்கு வராது என்று மக்கள் நினைத்தார்கள், ஆனால் தனது ஜோடி நாகம் புதைக்கப்பட்ட இடத்திற்கு மற்றொரு பாம்பு வந்துவிட்டது.

அங்கு சிறிது நேரம் காத்திருந்த பிறகு, காவல் நிலையத்திற்குள் சென்ற அந்த பாம்பு, மறியல் செய்வதுபோல் அங்கு படமெடுத்து அமர்ந்துவிட்டது.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்னும்போது, காவல்துறையினர் மட்டும் விதிவிலக்கா என்ன? கைகால்கள் வெலவெலத்துப் போய் செய்வதறியாமல் நின்றனர். 

Read Also | அணில் மற்றும் பாம்பு நேருக்கு நேர்; நடந்தது என்ன- வைரல் வீடியோ

பிறகு சுதாரித்துக் கொண்ட சிலர் பாம்பை அடிக்க முற்பட்டனர். காவல்நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் பாம்பை அடிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்த அவர், பாம்பை பிடிக்கச் செய்து காட்டில் கொண்டு விடச் செய்தார்.

நாகப்பாம்பு காவல் நிலையம் முன் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததை பார்த்த பொதுமக்கள், நாகப்பாம்பு தனது ஜோடியின் மரணத்திற்கு புகார் அளிக்க வந்திருக்கிறது என்று சொல்லத் தொடங்கிவிட்டனர். 

பாம்பு பழி வாங்கும் என்ற தொன்று தொட்டு வந்த நம்பிக்கையை உண்மையாக்குவது போல இந்த சம்பவம் இருப்பதாக பொதுமக்கள் ஆச்சரியப்படுகின்ரனர். இந்த செய்தி வைரல் செய்தியாகிவிட்டது.

Also Read | முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News