Bizarre Beard: முகத்தில் முடி வந்தால் கவலையில்லை என மகிழும் பெண்

முகத்தில் வளரும் அடர்த்தியான தாடியைப் பற்றிக் கவலைப்படாமல், அதை ஒரு ஒரு ஆயுதமாக மாற்றிக் கொண்டார் இந்த இளம்பெண்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 5, 2021, 06:55 PM IST
  • அடர்த்தியான தாடியைப் பற்றிக் கவலைப்படாமல், அதை ஆயுதமாக மாற்றிக் கொண்ட பெண்
  • ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திய சிக்கல்
  • முகத்தில் மட்டுமல்ல, மார்பிலும் முடி வளர்கிறது
Bizarre Beard: முகத்தில் முடி வந்தால் கவலையில்லை என மகிழும் பெண்  title=

பெண்களின் முகத்தில் முடி வந்தால் அது பற்றி கவலைப்பட்டு அதை மறைக்க முயல்வார்கள். அழகு நிலையத்திற்கு சென்று செலவு செய்து அதை அகற்றுவார்கள். முடி முகத்தில் வளராமல் இருக்க பல அழகு குறிப்புகளை தேடித்தேடி படிப்பார்கள்.

ஆனால், முகத்தில் அடர்த்தியான தாடி வளர்ந்தாலும், அது பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியடையும் பெண்ணைப் பற்றித் தெரியுமா?

இந்த பெண்ணின் முகத்தில் வளரும் அடர்த்தியான தாடியைப் பற்றிக் கவலைப்படாமல், அதை ஒரு ஒரு ஆயுதமாக மாற்றிக் கொண்டார். எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வது என்பது நம்முடைய விருப்பம் தான் என்பதை இந்த இளம்பெண் நிரூபித்திருக்கிறார். 

Also Read | Bizarre! ஆன்லைன் வகுப்பில் உடலுறவில் ஈடுபட்ட மாணவர் வீடியோ வைரல்! விளைவு என்ன?

அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் ஜீன் ராபின்சன் (Jean Robinson) பெண்ணின் முகத்தில் அடர்த்தியான தாடி வளர்கிறது. 35 வயதே ஆகும் அந்தப் பெண் முகத்தில் வளரும் முடியைப் பற்றிக் கவலைப்படாமல், தனது தோற்றத்தைப் பற்றி பெருமை கொள்கிறார். அதற்கு காரணம் தெரியுமா?

அமெரிக்காவின் புளோரிடாவில் நிதி ஆய்வாளராக பணிபுரியும் ஜீன் ராபின்சன் 20 வயதாக இருந்தபோது, அவர் முகத்தில் அடர்த்தியான கருப்பு முடி வளரத் தொடங்கியது. அவரது முகத்தில் மட்டுமல்ல, மார்பு மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் முடி வளரத் தொடங்கியது.

அவரது உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது. ஜீனுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளது, இதனால் தான் அவரது முகத்தில் தாடி வளர்கிறது. இதனால் மிகவும் வருத்தப்பட்ட ஜீன், ஒரு கட்டத்தில் மனதை தேற்றிக் கொண்டார்.

Also Read | நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகி பாபு; புகைப்படங்கள் வைரல்

உடலில் அசாதாரண வகையில் முடி வளர்வது (Hair Growth) தொடர்பாக இனி கவலைப்படுவதில்லை என்று முடிவு செய்துவிட்டார். எனவே, சமூக ஊடகங்களில் (Social Media) தன்னை பின்தொடர்பவர்களுடன் புதிய மற்றும் எளிதான முடி அகற்றும் முறைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவரை சமூக ஊடகங்களில் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர். இதிலிருந்தும் அவர் பணம் சம்பாதிக்கிறார்.

தொடக்கத்தில் தனக்கு ஏற்படும் அசாதாரண முடி வளர்ச்சியை மறைக்க தீவிரமாக முயற்சி செய்ததாக ஜுன் ராபின்சன் கூறுகிறார். தினசரி முகச் சவரம் செய்ததாக கூறும் ஜுன், வெளியிடங்களுக்கு போவதை தவிர்த்ததாகவும், தன்னை பார்ப்பதற்கே பிடிக்கவில்லை என்றும், வாழ்க்கையே வெறுத்துபோய் மிகவும் சோகமாக இருந்ததாகவும் சொல்கிறார். 

அதுமட்டுமல்ல, முகத்தில் வளரும் தாடியில் இதுவரை தனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லை என்றும், வெகு சிலரே தன்னுடன் நட்பு கொள்கிறார்கள் என்றும் இந்த வித்தியாசமான பெண் கூறுகிறார். ஆனால் இப்போது நிதர்சனத்தை ஏற்று நிம்மதியாக வாழத் தொடங்கிவிட்டதாக சொல்கிறார் இந்த நவீனப் பெண்…

Also Read | பாடகியாக அறிமுகமான லாஸ்லியா: வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News