பாடகியாக அறிமுகமான லாஸ்லியா: வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார் நடிகை லாஸ்லியா.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 5, 2021, 02:12 PM IST
பாடகியாக அறிமுகமான லாஸ்லியா: வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார் நடிகை லாஸ்லியா. அந்த பிரபாலாமான நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது.

அந்தவகையில் தற்போது நடிகை லாஸ்லியா மரியனேசன் (Losliya Mariyanesan) கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’ (Friendship), ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன. இதில் பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிகை லாஸ்லியா நடித்துள்ளார். 

ALSO READ | சூப்பர் கிரிக்கெட்டரில் இருந்து Friendship நடிகராக அவதாரம் எடுக்கும் ஹர்பஜன் சிங்

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் சதீஷ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல கவனம் ஈர்த்தது. 

இந்நிலையில் தற்போது நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். முதல் பாடலாக வெளிவந்துள்ள அடிச்சு பறக்கவிடுமா பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் லாஸ்லியா. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ALSO READ | பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? இவர்தாங்க மாப்பிள்ளை...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News