Bizarre Whisky! ஒரு பாட்டில் விஸ்கி விலை 1 கோடி ரூபாய்! டாஸ்மாக்கே பரவாயில்லை!

உலகின் மிகப் பழமையான இந்த விஸ்கி, சுமார் 250 ஆண்டுகள் பழமையானது. இது அண்மையில் 137,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டது, இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆகும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2021, 04:21 PM IST
  • ஒரு பாட்டில் விஸ்கி விலை 1 கோடி ரூபாய்!
  • உலகிலேயே அதிகமான விஸ்கி
  • ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய விஸ்கியை யார் குடிப்பார்கள்?
Bizarre Whisky! ஒரு பாட்டில் விஸ்கி விலை 1 கோடி ரூபாய்! டாஸ்மாக்கே பரவாயில்லை! title=

ஒரு விஸ்கி பாட்டிலின் விலை ஒரு கோடி ரூபாய் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித் தான் ஆக வேண்டும். ஏனென்றால் இது உண்மை. மிகப் பழமையான இங்க்லெட் (Ingledew) விஸ்கி தான் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. 1860 ஆம் ஆண்டில் பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த விஸ்கி, அதற்கும் ஒரு நூற்றாண்டு முன்னரே தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது

உலகின் மிகப் பழமையான இந்த விஸ்கி, உலகின் மிக அதிகமான விலையுள்ள விஸ்கி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. சுமார் 250 ஆண்டுகள் பழமையானத இது, அண்மையில் 137,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டது, இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். விஸ்கி அதன் அசல் விலையை விட ஆறு மடங்கு அதிகமாக ஏலத்தில் வைக்கப்பட்டது. ஒரு பாட்டில் ஸ்காட்ச் கிட்டத்தட்ட 2 மில்லியன் டாலர்களுக்கு விற்ககிறது.  

ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே தயாரிக்கப்பட்ட விஸ்கியை, 1860 ஆம் ஆண்டு பாட்டிலில் ஊற்றினார்கள் என்று டெய்லி மெயிலில் வெளியான செய்தி கூறுகிறது 
1860 களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட விஸ்கி, அதற்கு 100 ஆண்டுகள் முன்பு தயாரிக்கப்பட்டதாக   நம்பப்படுகிறது.

Also Read | 'Anti-sex' beds: டோக்கியோ ஒலிம்பிக்கில் 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள்!

இது அக்காலத்தின் பிரபல நிதியாளரான ஜே.பி. மோர்கனால் உருவாக்கப்பட்டது என பாட்டிலின் லேபிளில் குறிப்பிடப்பட்டுளது. ‘இந்த விஸ்கி அநேகமாக 1865 க்கு முன்பு தயாரிக்கப்பட்டது, இது ஜே.பி. மோர்கனின் பாதாள அறையில் இருந்தது. மோர்கனின் மறைவுக்குப் பிறகு பாட்டில் அவரது பண்ணை வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்த பாட்டில் 20,000 முதல், 40,000 அமெரிக்க டாலர் வரை விலைபோகும் என ஏல நிறுவனமான ஹவுஸ் ஸ்கின்னர் இன்க். (Auction house Skinner Inc.) மதிப்பிட்டிருந்தது. இருப்பினும், ஜூன் 30 அன்று முடிவடைந்த ஏலத்தில் மிடவுன் மன்ஹாட்டனில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான தி மோர்கன் நூலகத்திற்கு 137,500 அமெரிக்க டாலர்களுக்கு பாட்டில் விற்கப்பட்டது.

இந்த விஸ்கியை நிபுணர்கள் மதிப்பீடு செய்யதனர். 1763 மற்றும் 1803 க்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்க 53 சதவிகிதம் வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் குழு மதிப்பிட்டது. 1770 களின் புரட்சி மற்றும் 1790 களின் விஸ்கி கிளர்ச்சியையும் இந்த விஸ்கி பார்த்திருக்கிறது.  

அதுசரி, ஒரு கோடி ரூபாய் கொடுத்து இப்போது வாங்கப்பட்ட விஸ்கியை யாராவது ஒரு சொட்டாவது ருசிப்பார்களா என்று மலிவு விலை மது கேலி செய்கிறதாம்! இது எப்படி இருக்கு!

Also Read | Sandcastle: இந்த மணல்கோட்டையை எந்த அலையும் அடித்துச் செல்லாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News