தும்பிக்கை அரண் அமைத்து குட்டியை பாதுகாக்கும் யானைகளின் பாச வீடியோ வைரல்

Elephants Family Video: குழந்தைக்கு பாதுகாப்பாய்  தும்பிக்கை அரண் அமைக்கும் யானைப் பெற்றோரின் வீடியோ வைரலாகிறது... பாசக்கார யானை குடும்பம் என்று பலரும் பதிவிடுகின்றனர்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 30, 2022, 12:11 PM IST
  • குட்டிக்கு பாசத்தை மட்டுமல்ல பாதுகாப்பையும் வழங்கும் யானைக் குடும்பம்
  • வனத்தில் செல்லும் வாகனத்திற்கு வழிவிடும் யானைக் குடும்பம்
  • பாதுகாப்பாய் குழந்தையை அரவணைக்கும் யானை அம்மா அப்பா
தும்பிக்கை அரண் அமைத்து குட்டியை பாதுகாக்கும் யானைகளின் பாச வீடியோ வைரல் title=

யானையின் வைரல் வீடியோ: பலவிதமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு, அவை பார்க்கப்பட்டு வருகிறது, அதிலும் விலங்குகளின் சுட்டியான குட்டி வீடியோக்களை பார்ப்பதற்கென ரசிகர் வட்டமே உண்டு. யானைகள் செய்யும் சில அழகான மற்றும் வேடிக்கையான செயல்கள் மனதை கவர்பவை. யானைகளும், யானைக்குட்டிகளும் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன, உருவத்தில் பெரியதாக இருந்தாலும், யானையின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் சில சமயங்களில் விநோதமாகவும் இருப்பதால் அவை வைரலாகின்றன. சமீபகாலமாக யானைகள் செய்யும் குறும்புகள்  இணையவாசிகளை கவர்ந்து வருகிறது, தற்போது யானைக் குடும்பம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வனப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருப்பது வீடியோவில் தெரிகிறது. அதே வீடியோவில் யானைக் குடும்பம் ஒன்றும் தெரிகிற்து. முதலில் இந்த வீடியோவை பார்க்கும்போது, யானைகள் திடீரென திரும்பி பேருந்தைத் தாக்குமோ என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது.  

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை? 

யானைகளை பார்த்த பேருந்து ஓட்டுநர், அதை மெதுவாக இயக்குகிறார். பேருந்தின் முன்பு சாலையை கடக்க முயல்கின்றன யானைகள். யானைகள், தங்கள் குட்டியை நடுவில் நடக்க விட்டு, பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றன. இந்த காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பெற்றோரின் பாதுகாப்பான மனநிலைமை பலரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரையும் பெரிதும் கவர்ந்த இந்த வீடியோவை இதுவரை ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கண்டு ரசித்துள்ளனர்.. மேலும் இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

யானைக்குட்டியை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் அதன் பெற்றோர், பேருந்து தங்களை கடக்கும்போது, தும்பிக்கைகளை குழந்தைகளுக்கு முன் நீட்டி அதை பாதுகாப்பது, யானைகளின் பாசத்தைக் காட்டுகிற்து. குழந்தைக்கு பாதுகாப்பாய்  தும்பிக்கை அரண் அமைக்கும் யானைப் பெற்றோரின் இந்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஆச்சரியம் அளிக்கும் இந்த குட்டி வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்க | சிறுவர்களின் குளிப்பாட்டல், அசந்து உறங்கும் யானை: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News