கல்யாணம் ஆன உடனேயே இப்படியா? 'அந்த' இடத்திலேயே அடித்த மணமகள், வைரல் வீடியோ!!

Funny Wedding Video: இந்த வீடியோவை பார்த்தால் 'எந்த ஒரு மாப்பிள்ளைக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது' என சொல்லத் தோன்றும். அப்படி ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 14, 2023, 04:16 PM IST
  • திருமணங்களில் பல்வேறு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உள்ளன.
  • அவற்றில் சில மிகவும் வேடிக்கையானவை.
  • இந்த வேடைக்கையான சடங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன.
கல்யாணம் ஆன உடனேயே இப்படியா? 'அந்த' இடத்திலேயே அடித்த மணமகள், வைரல் வீடியோ!! title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

திருமணங்களில் பல்வேறு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் வேடிக்கையானவை. இந்த சடங்குகளை செய்யும்போது சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே போட்டியும், சில சமயம் மணமக்களுக்கு இடையிலேயே போட்டியும் சண்டைகளும் ஏற்படுவதுண்டு. இந்த வேடைக்கையான சடங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. 

தற்போது இணையத்தில் மீண்டும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் திருமணத்திற்குப் பிறகு மணமகனும், மணமகளும் செய்யும் ஒரு சடங்கில் மணப்பெண் தன் மாப்பிள்ளையை அடிக்க ஆரம்பிக்கிறார். மாப்பிள்ளையால் இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. அமைதியாக அடி வாங்கிக்கொள்கிறார். 

 மணமகனை அடித்த மணமகள்

இந்த வைரலான வீடியோவில், மணப்பெண் ஒருவர் படுக்கையில் கைகளில் குச்சியுடன் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. மாப்பிள்ளையும் அவள் மடியில் படுத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து சிலர் மாப்பிள்ளை மீது பலூனை வைக்கிறார்கள். சடங்கின் படி மணமகள் அந்த குச்சியால் பலூனை அடித்து உடைக்க வேண்டும். ஆனால், அதற்குள் பலூன் எடுக்கப்பட்டால் மாப்பிள்ளைக்குதான் அடி விழும். மணமகள் எவளவு முயன்றும் அவரால் சரியாக பலூனை அடிக்க முடியாமல் போகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளைக்கே அடி விழுகிறது. இதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்.

மேலும் படிக்க | 'கிட்ட வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ...': மாஸ் காட்டும் நாயின் வைரல் வீடியோ 

ஒழுங்காக அடித்து பலூனை உடைக்குமாறு மணமகன் மணமகளிடம் கூறுகிறார். ஆனால், அது நடக்காமல் போகவே அங்கு ஒரு வேடிக்கையான கலாட்டா நடக்கிறது. 

வேடிக்கையான அந்த திருமண வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@aylogyworld)

இந்த தனித்துவமான திருமண வீடியோ aylogyworld என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இது சீன திருமண சடங்காக தோன்றுகிறது. இந்த சடங்கை இந்திய திருமணங்களிலும் செய்தால் நன்றாக இருக்கும் என பலர் வேடிக்கையாக கூறியுள்ளார்கள். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | திருமணத்தில் மணப்பெண்ணின் செயலால் ஷாக்கான உறவினர்கள்: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News