கல்யாணத்த வெச்சிகிட்டு இப்படியா செய்யறது? புல்லெட்டில் பறந்த மணமகள், வைரல் விடியோ

Funny Wedding Video: மாஸாக புல்லெட்டில் வந்த மணமகளின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. மணமகளின் மாஸ் எண்ட்ரியை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 17, 2022, 02:57 PM IST
  • திருமண உடையில் மாஸாக புல்லெட் ஓட்டிய மணமகள்.
  • வைரலாகும் மணமகளின் மாஸ் எண்ட்ரி.
  • இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.
கல்யாணத்த வெச்சிகிட்டு இப்படியா செய்யறது? புல்லெட்டில் பறந்த மணமகள், வைரல் விடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான வீடியோக்கள் வெவ்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டு, பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன. அதில், திருமணம் தொடர்பான வீடியோக்களின் எண்ணிக்கையே அதிகம். திருமணம் என்பது ஒருவரது வாழ்வில் மிகமும் முக்கியமான ஒரு தருணமாகும். திருமண நாள் பற்றிய கனவுகள் அனைவருக்கும் இருக்கும். இந்த தருணத்தை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும் படி செய்ய, நாம் திட்டங்களை தீட்டுகிறோம், ஏற்பாடுகளை செய்கிறோம். சில திருமணங்களில் நாம் நம்பமுடியாத பல விஷயங்கள் நடக்கின்றன. இவை எப்போதும் நம் மனதில் நின்று விடுகின்றன. 

இந்த காலத்தில் திருமணத்தில் தங்கள் எண்ட்ரி மிக வித்தியாசமாக, அதிரடியாக இருக்க வேண்டும் என மணமக்கள் விரும்புகிறார்கள். அப்படி ஒரு வித்தியாசமான எண்ட்ரிக்காக ஆசைப்பட்ட ஒரு மணமகளின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  

திருமண நாளில், பெரும்பாலான மணமக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் வகையில் தனித்துவமான செயல்களை செய்ய விரும்புகிறார்கள். இன்றைய திருமணங்களில் எண்ட்ரி முதல் மணமேடை வரை, அனைத்தும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். குறிப்பாக மணமகளின் பல்வேறு விதமான எண்ட்ரிகளை நாம் கண்டுள்ளோம். தற்போது வெளியாகியுள்ள வீடியோவிலும் அப்படி ஒரு வித்தியாசமான மணமகள் எண்ட்ரியை காண முடிகின்றது. திருமணத்திற்கு முன் பார்லருக்குச் செல்லும் மணப்பெண், அங்கிருந்து தயாரானதும், திருமண மண்டபத்தை அடைய புல்லெட்டில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ‘சின்னபுள்ளதனமால்ல இருக்கு’: மணமக்கள் செய்த வேலை, ரசிக்கும் நெட்டிசன்கள், வீடியோ வைரல்

திருமண உடையில் மாஸாக புல்லெட் ஓட்டிய மணமகள் 

மணப்பெண் கனமான திருமண ஆடைகளை அணிந்து அசால்டாக புல்லெட்டை ஓட்டிப்போவதை காண ஆச்சரியமாக உள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாக மக்கள் பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள். அதை போல இந்த மணமகளும் மாஸாக புல்லெட் ஓட்டி மணமண்டபத்தை அடைந்து வைரலாக முயற்சி செய்துள்ளார். திருமணத்திற்கு முன் அழகான லெஹங்கா அணிந்து, முழு மேக்கப் செய்துகொண்டு திருமண மண்டபத்துக்கு செல்ல தயாராகிறார். அப்போது திருமண மேடைக்கு செல்ல புல்லெட் சவாரி செய்ய வேண்டும் என அவருக்கு தோன்றுகிறது. தன் மனம் விரும்பியது போல, புல்லெட் ஓட்டியபடி மணமேடையை அடைய அவர் முடிவு செய்தார். 

புல்லட்டில் செல்ல அப்பாவிடம் அடம் பிடித்த மணமகள் 

புல்லெட்டில் செல்ல மணமகள் தன் தந்தையிடம் அடம் பிடித்ததாக வீடியோவில் எழுதப்பட்டுள்ளது. வீடியோவில் தலைப்பில், ‘அப்பாவிடம் அடம் பிடித்த மணமகள்’ என எழுதியுள்ளனர். மணப்பெண் புல்லட்டின் மேல் அமர்ந்து லெஹங்காவை சரிசெய்யுமாறு அருகில் நின்றவர்களிடம் கூறுவதையும் வீடியோவில் காண முடிகின்றது.

இதற்கிடையில், யாரோ பின்னால் இருந்து ஏதோ சொன்னபோது,  ‘பரவாயில்லை​..இருக்கட்டும்’ என மறுத்து விடுகிறார். இதற்குப் பிறகு, மணப்பெண் புல்லெட்டில் சாலையில் பறக்கத் தொடங்குகிறார். இந்த வீடியோ deera.makeovers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 3 லட்சம் பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | மணமகனை பளார் என அடித்த மணமகள்: ஷாக் ஆன நெட்டிசன்கள், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News