ப்பா.. என்ன ஆட்டம்! சாலையில் குத்தாட்டம் போட்ட சிறுமியின் வீடியோ வைரல்!

தெருக்கூத்து கலைஞர்கள் புலிவேஷம் போட்டுகொண்டு ஆடும்பொழுது அவர்களுடன் இணைந்து ஒரு சிறுமியும் உற்சாகமாக நடனமாடுவது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 17, 2022, 01:19 PM IST
  • தெரு கலைஞர்களுடன் நடனமாடும் குழந்தை.
  • அவர்களுடன் இணைந்து குத்தாட்டம் போடுகிறது.
  • தனது நடனத்தால் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார்.
ப்பா.. என்ன ஆட்டம்! சாலையில் குத்தாட்டம் போட்ட சிறுமியின் வீடியோ வைரல்!  title=

சிறு வயது குழந்தைகளுக்கு எந்தவித கவலையும் இருக்காது, அவர்கள் எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்கிற தடைகளும் இருக்காது.  பட்டாம்பூச்சி போல சிறகடித்து பறக்கும் சிறு வயது என்பது பொக்கிஷமான காலம், வயது வந்த பலரும் இன்றளவு ஏங்கித்தவிப்பது என்னவோ அவர்களது குழந்தை பருவத்தை தான்.  குழந்தைகள் எவ்வளவு தான் சேட்டை செய்தாலும் அவற்றின் மீது நமக்கு அவ்வளவு எளிதில் வெறுப்பு வந்துவிடாது, குழ்நதைகளின் ஒவ்வொரு செயல்களும் ரசனைக்குள்ளாகின்றது.  குழந்தைகள் எப்போதும் பாரபட்சமின்றி பழகும் மனம் படைத்தவர்கள், நல்லவர்கள் கெட்டவர்கள் என்கின்ற பேதமின்றி அனைவருடனும் பழகக்கூடியவர்கள்.  தற்போது ஒரு குழந்தை தெருக்கூத்து கலைஞர்களுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவானாது ட்விட்டரில் விசிட் உடுப்பி என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  கர்நாடக மாநிலம் உடுப்பியில் தெருக்கூத்து கலைஞர்கள் புலி வேஷம் போட்டுகொண்டு தெருவில் நடனமாடி வருகின்றனர்.  அவர்களை பாராட்டும் விதமாக ஒரு பெண் தனது குழந்தையுடன் சென்று அவர்களுக்கு மாலை அணிவிக்கிறார், அப்போது அந்த நடன கலைஞர் அந்த குழந்தையை தங்களுடன் ஆட வருமாறு அழைக்கிறார்.  அந்த குழந்தையும் எவ்வித தயக்கமும் காட்டாமல் உடன் அவர்களுடன் சென்று அவர்கள் ஆடுவதை பார்த்து அப்படியே அழகாக நடனமாட தொடங்குகிறது.  சிறுமியின் துள்ளலான நடனம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.  பின்னர் அவர்களுடன் ஒரு சிறுவனும் இணைந்து நடனமாட தொடங்குகிறான்.

 

மேலும் படிக்க | மணமேடையில் திருமண ஜோடி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மேலும் அந்த ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்த விவரம் பதிவிடப்பட்டுள்ளது, பிலி வேஷம் என்பது புலி மாஸ்க்கை அணிந்துகொண்டு கர்நாடகா பகுதியில் ஆடப்படும் ஒரு நடனமாகும்.  இதில் இளம்வயதினர் உடலில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் கோடுகளை போட்டுகொண்டு முகத்தில் புலி முகமூடியை அணிந்துகொண்டு ட்ரம்ஸ் வாசிப்பதற்கு ஏற்ப நடனம் ஆடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  இதனை பார்த்த ஒருவர் பிலி வேஷம் போட்டவர்களை பார்த்து பயப்படும் குழந்தைகளுக்கு மத்தியில், இந்த குழந்தை தைரியமாக ஆடுகிறது என்று கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | கார்ட்டூனை பார்த்து விளையாடும் பூனைக்குட்டி! இணையத்தை கலக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News