மேடையில் மணமகன் செய்த வேலையால் வெட்கத்தின் உச்சியில் மணமகள்: வீடியோ வைரல்

Funny Wedding Video: இப்படிப்பட்ட ஒரு நடனத்தை பார்த்திருக்க முடியாது. மணமகன் மணமேடையில் போட்ட குத்தாட்டம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2022, 12:39 PM IST
  • இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம்.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
  • இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன.
மேடையில் மணமகன் செய்த வேலையால் வெட்கத்தின் உச்சியில் மணமகள்: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன. 

மணமகன் மற்றும் மணமகளின் பல வித நடன வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். சில நேரங்களில் மணமகனும், மணமகளும் வெட்கத்துடன் நடனமாடுகிறார்கள். ஆனால், சில சமயங்களில் விருந்தினர்களால் கூட நம்ப முடியாத அளவுக்கு குத்தாட்டம் போடுகிறார்கள். மாப்பிள்ளை மணமகள் மீது கொண்டுள்ள காதல் மற்றும் அன்பை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. 

திருமண நாற்காலியில் மணமகனும், மணமகளும் அமர்ந்திருப்பதை வீடியோவின் தொடக்கத்தில் காண முடிகின்றது. திடீரென யாரோ ஒருவர் இசையை துவக்க, மணமகன் யாரும் எதிர்பாராத வண்ணம் தனது ஆட்டத்தை துவக்குகிறார். அவர் ஆடிய நடனத்தையும் அதில் வெளிப்பட்ட அவரது காதலையும் கண்டு மணமகள் வெட்கிப்போகிறார். 

மேலும் படிக்க | ஆத்தா..இனி நீ கிச்சன் பக்கமே வராத, இப்படி ஒரு சமையலா: வீடியோ வைரல்

மணமகனின் அசத்தும் நடனம் 

திருமணம் தொடர்பான இந்த வீடியோவில் அனைவரும் திருமண சடங்குகளில் பிஸியாக இருப்பதை காண முடிகின்றது. மணமகனும், மணமகளும் நாற்காலியில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எனினும், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்க மணமகன் ஏற்கனவே ஒரு திட்டத்துடன் தயாராக இருந்தார். இசை ஒலிக்கத் தொடங்கியவுடன், அவர் எழுந்து அட்டகாசமாக நடனமாட தொடங்குகிறார். 

மணமகனின் அசத்தல் நடன வீடியோவை இங்கே காணலாம்:

இன்ப அதிர்ச்சி பெற்ற மணமகள்

மணமகன் திடீரென நடனமாடத் தொடங்கியதைப் பார்த்த மணமகளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவளுக்கு ஒருவித ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுகின்றது. இந்த அசத்தல் திருமணத்தின் வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. மணமகனின் இந்த காதல் பாணியை அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

மணமகனின் காதல் மற்றும் அன்பை வெளிக்காட்டும் இந்த வீடியோ இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் மணமகனின் நடனத்தையும் மணமகளின் கியூட் வெட்கத்தையும் ரசித்து வருகின்றனர், பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | கல்யாணத்த வெச்சிகிட்டு இப்படியா செய்யறது? புல்லெட்டில் பறந்த மணமகள், வைரல் விடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News