குத்தாட்டம் போட்ட மணமகன், வேற லெவலில் ஈடு கொடுத்து ஆடிய மணமகள்: வைரல் வீடியொ

வீடியோவில் மணமகனும் மணமகளும் ஆடும் வேகத்தையும் விதத்தையும் பார்த்தால் நம் கண்களை நம்மாலே நம்ப முடியாது. இருவரும் மேள தாளத்திற்கு ஏற்றவாறு நடனமாடி பட்டையைக் கிளப்புகிறார்கள்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 08:11 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • இவர்களது ஆட்டத்தைப் பார்த்தால் நீங்களும் பார்த்தபடியே இருந்து விடுவீர்கள்.
குத்தாட்டம் போட்ட மணமகன், வேற லெவலில் ஈடு கொடுத்து ஆடிய மணமகள்: வைரல் வீடியொ title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியொ இணையத்தை கலக்கி வருகின்றது.

திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆடும் நடனத்தால் மக்கள் பெரும்பாலும் ஈர்க்கப்படுகிறார்கள். மணமகனும் மணமகளும் இந்நாட்களில் பெரும்பாலும் தங்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பார்த்து பார்த்து செய்கிறார்கள். அதுவும் நடனத்தில் ஒரு சிறு குறை கூட வைப்பதில்லை.

ALSO READ | ஆசையா ஸ்வீட் கொடுத்த மாப்பிள்ளை, வேற லெவலில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண்: வைரல் வீடியோ

திருமண (Marriage) மேடைகளில் நடக்கும் நடனங்களை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். இந்த பதிவில் சாலையில் ஒரு ஜோடி ஆடும் நடனத்தை பார்க்கலாம். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்க்களில் வைரல் ஆகி வருகின்றது. 

வீடியோவில் மணமகனும் மணமகளும் ஆடும் வேகத்தையும் விதத்தையும் பார்த்தால் நம் கண்களை நம்மாலே நம்ப முடியாது. இருவரும் மேள தாளத்திற்கு ஏற்றவாறு நடனமாடி பட்டையைக் கிளப்புகிறார்கள்.  

மணமகனுக்குப் பிறகு மணமகள் நடனம்
சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக பரவி வரும் இந்த வீடியோவில் முதலில், மணமகன் நடு சாலையில், மேள தாளத்துக்கு ஏற்ப நடமாடுவதைக் காண முடிகின்றது. மணமகன் மணமகளை நோக்கி அவரையும் நடனமாடும்படி சைகை செய்கிறார். 

இதற்காக காத்திருந்தது போல மணமகளும் நடனமாட வருகிறார். தனது செருப்புகளைக் கழற்றிவிட்டு, நடனமாட வருகிறார். அவர் வந்து போடும் குத்தாட்டத்தைப் பார்த்து மணமகன் உட்பட அனைவரும் திகைத்து நிற்கிறார்கள். பலர் மணமகன் மற்றும் மணமகளின் போட்டோ மற்றும் வீடியோவையும் எடுக்கத் தொடங்கினர். 

இவர்களது ஆட்டத்தைப் பார்த்தால் நீங்களும் பார்த்தபடியே இருந்து விடுவீர்கள். 

அந்த அசத்தலான வீடியோவை இங்கே காணலாம்:

புல்லட் வேகத்தில் வைரலாகி வரும் வீடியோ
மணமகனும், மணமகளும் நடனமாடும் இந்த வீடியோ weddingsfever என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் (Viral Video) தலைப்பில், 'உங்கள் தோழியே உங்கள் மனைவியானால் உங்கள் உற்சாகம் இப்படிதான் இருக்குன்' என எழுதப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவுக்கு பல்வேறு ரியாக்ஷன்கள் வர ஆரம்பித்துள்ளன. பல நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வீடியோவுக்கு பல லைக்குகளும் வியூஸ்களும் வந்த வண்ணம் உள்ளன. 

நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து உங்கள் கமெண்டுகளை பதிவிடலாமே!!

ALSO READ | நண்பர்களாக மாறி இணையத்தை கலக்கும் சிங்கம் மற்றும் நாய்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News