மணமகள் செய்த வேலை... அந்த ரியாக்‌ஷன்!! கொண்டாடும் நெட்டிசன்ஸ்: செம கியூட் வைரல் வீடியோ

Cute Viral Video: மணப்பெண்ணால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனது மாப்பிள்ளையை காணும் ஆர்வத்தில் அவர் பால்கனிக்கு ஓடுகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2023, 12:34 PM IST
  • மிக கியூட்டான இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
மணமகள் செய்த வேலை... அந்த ரியாக்‌ஷன்!! கொண்டாடும் நெட்டிசன்ஸ்: செம கியூட் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் தினமும் பல விதமான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல விதமான சடங்குகளை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இது மட்டுமின்றி திருமணத்தில் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் இவற்றில் நாம் பார்த்துள்ளோம். தற்போது அப்படி ஒரு திருமண வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது காண்பதற்கு மிக கியூட்டாக உள்ளது. 

இந்த வீடியோவில் மணப்பெண் ஒருவர் தனது மாப்பிள்ளையை பார்த்ததும் பால்கனியில் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதை காண முடிகின்றது. தான் மட்டும் கொண்டாடாமல் தனது உறவினர்களையும் அவர் இந்த கொண்டாட்டத்தில் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். 

மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்திய மணமகள் 

வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், மணப்பெண் மேக்கப் அறையில் அமர்ந்து மாப்பிள்ளை ஊர்வலம் வருவதற்காகக் காத்திருப்பதைக் காண முடிகின்றது. சிறிது நேரம் கழித்து, திருமண ஊர்வலத்தின் வருகை பற்றிய தகவல் அவருக்கு கிடைக்கிறது. அதன் பின்னர் மணப்பெண்ணால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தனது மாப்பிள்ளையை காணும் ஆர்வத்தில் அவர் பால்கனிக்கு ஓடுகிறார். 

மாப்பிள்ளை ஊர்வலத்தைப் பார்த்து, தன் உறவினரிடம் மாப்பிள்ளை எங்கே என்று அவர் கேட்கிறார். கீழே ஊர்வலத்தில் ஏராளமானோர் இருப்பதால், அவரால் மாப்பிள்ளை இருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. மணமகன் அவருக்குத் தெரிந்தவுடன், அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து சீனு சீனு என்று கத்த ஆரம்பிக்கிறார். மணப்பெண்ணைப் பார்த்ததும் அவரது மற்ற உறவினர்களும் சீனு சீனு என்று கத்தத் தொடங்குகிறார்கள். மாப்பிள்ளையின் செல்லப்பெயர் சீனு என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. மணமகள் மணமகனது பெயரை கூறி பலமுறை கத்தினாலும் அவரது குரல் மணமகனை எட்டவில்லை.

மணமகனும் நடனமாடினார்

தனது திருமணம் குறித்து மணமகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இவர்களது திருமணம் காதல் திருமணம் என கூறப்படுகின்றது. தங்கள் காதலை பெற்றொரிடம் சொல்லி அதற்கு ஒப்புதல் வாங்க இவர்கள் கடுமையாக முயற்சி செய்துள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது. 

மணமகள் பால்கனியில் இருந்து தன்னை அழைப்பதை பார்த்த மணமகனாலும் தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரும் மகிழ்ச்சியின் உச்சியில் நடனமாடுகிறார். இந்த காட்சி காண்பதற்கு மிக கியூட்டாக உள்ளது.

பால்கனியின் நின்ற மணமகள் மகிழ்ச்சியிப் மிகுதியால் நடனமாடத் தொடங்கிறார். பின் தன் ஆசை காதலனுக்கு, கணவனாகப் போகும் காதலனுக்கு அங்கிருந்த படியே முத்தம், அதாவது ஃப்ளையிங் கிஸ் கொடுக்கிறார். 

மேலும் படிக்க | கை, கால், தொடை, இடுப்பு... பெண்ணை கவ்விய புலி: அன்புத் தொல்லையால் அரண்ட பெண், வைரல் வீடியோ

மணமகளின் மாஸ் ரியாக்‌ஷனை இந்த வீடியோவில் காணலாம்:

மிக கியூட்டான இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

'இப்படிப்பட்ட மனைவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'ப்பா.. என்ன ஒரு அன்பு!!' என மற்றொரு பயனர் வியந்துள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: இனி இந்த பக்க தலை வச்சு படுக்க கூடாது... சிறுத்தையை ஓட விட்ட கலை மான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News