கை, கால், தொடை, இடுப்பு... பெண்ணை கவ்விய புலி: அன்புத் தொல்லையால் அரண்ட பெண், வைரல் வீடியோ

Scary Viral Video: தடவிக்கொடுத்த பெண்ணின் கையை லபக் என பற்றிக்கொண்டது புலி. அடுத்து நடக்கும் அனைத்தும் நம்மை மிரள வைக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2023, 07:24 PM IST
  • தற்போதும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
  • அதில் ஒரு பெண்ணையும் அவர் அருகில் ஒரு மிகப்பெரிய புலியையும் காண முடிகின்றது.
  • இதில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் நம் கண்ணையே நம்மால் நம்ப முடியவில்லை.
கை, கால், தொடை, இடுப்பு... பெண்ணை கவ்விய புலி: அன்புத் தொல்லையால் அரண்ட பெண், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பல நேரங்களில் மக்கள் அச்சுறுத்தும் விலங்குகளை லேசாக எடுத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். மனிதனை உண்ணும் விலங்குகளை நம்புவது ஆபத்தானது. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்ளாமல் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. சிலர் பயங்கர விலங்குகளை வீடுகளில் வளர்க்கிறார்கள். சிலர் அவை பாதுகாக்கப்படும் மிருகக்காட்சி சாலைகளில் பணிபுரிகிறார்கள். ஆகையால் அவற்றுடன் நல்ல நெருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. 

என்னதான் நெருக்கம் இருந்தாலும், மனிதர்களை வேட்டையாடும் விலங்குகளுடன் கண்டிப்பாக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவற்றின் மனநிலை எப்போது மாறும் என யாருக்கும் தெரியாது. பல மிருகங்கள் நீண்ட நாட்களாக பழகிய தங்கள் உரிமையாளர்களை தாக்கிய பல சம்பவங்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். 

தற்போதும் கிட்டத்தட்ட அப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண்ணையும் அவர் அருகில் ஒரு மிகப்பெரிய புலியையும் காண முடிகின்றது. இதில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் நம் கண்ணையே நம்மால் நம்ப முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்த வீடியோ நம்மை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. 

வீடியோவில் காணப்படும் பெண் புலியின் அருகில் வந்து அதன் தலையை வருடி விடுவதை காண முடிகின்றது. அப்போது புலி விழித்துக்கொண்டு அந்த பெண்ணின் கையை தனது வாயால் பிடித்துக்கொள்கிறது. அந்தப் பெண் புலியிடம் இருந்து தன் கையை அகற்ற பல முறை முயற்சிக்கிறார். ஆனால் புலி தன் பிடியை தளர்த்தவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் தன் கையை விடுவிக்கிறாள். ஆனால் புலி கையை விட்டு பெண்ணின் தொடையை அழுத்த முயற்சிக்கிறது.

கையை விட்டு தொடையை பிடித்த புலி

கையை விட்ட புலி தொடையை பிடிக்கவே, பெண் அடுத்து தன் தொடையை விடுவிக்க முயற்சி செய்கிறார். ஆனால், புலி அந்த பெண்ணின், தொடை, இடுப்பு, மணிக்கட்டு என மாறி மாறி தன் வாயால் பற்றிக்கொள்கிறது. பெண்ணை பார்த்தால் அவர் ஆரம்பத்திலிருந்தே புலியை பார்த்து அச்சப்படுவது போலதான் தெரிகிறது. ஆனால், மறுபுறம் அதிக அச்சம்ம் காணப்படவில்லை. அந்த புலியிடம் நன்கு பழகியவர் போலவும் அவர் அதை தடவிக்கொடுத்து பேச்சுக்கொடுக்கிறார். அதனுடன் பேச்சுக்கொடுத்து அதன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.

கடிக்கிறதா? கொஞ்சுகிறதா?

ஆனால், இந்த வீடியோவில் உள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த சிங்கம் பெண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் இருப்பது போல தெரியவில்லை. அது பெண்ணின் கை, தொடை, இடுப்பு என அனைத்து பாகங்களையும் தன் வாயால் கவ்வுகிறதே தவிர அவருக்கு வலிக்கும் வகையிலோ அல்லது காயப்படும் வகையிலோ கடிக்கவில்லை. வீடியோவில் சில சமயங்களில் அந்த புலி பெண்ணை கொஞ்சுவது போல கூட தெரிகிறது. 

மேலும் படிக்க | Viral Video: இனி இந்த பக்க தலை வச்சு படுக்க கூடாது... சிறுத்தையை ஓட விட்ட கலை மான்!

மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Earth Reels (@earth.reel)

ஆபத்தான விளையாட்டு என கமெண்ட் செய்த பயனர்கள் 

இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் earth.reel என்னும் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்த பயனர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒன்றாக ஏற்படுகின்றது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

'இந்த விபரீத விளியாட்டு தேவையா?' என ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். 'அந்த புலியின் மூட் நன்றாக இருக்கவே அந்த பெண் தப்பித்தார்' என மற்றொருவர் எழ்தியுள்ளார். 'பெண்ணின் முகத்தின் அச்சம் அப்பட்டமாக தெரிகின்றது' என மற்றொருவர் எழுதியுள்ளார். எனினும் சிலரோ, அந்த பெண்ணுக்கும் புகிக்கும் இடையில் உள்ள அன்பான உறவையும் பாராட்டி உள்ளனர். 

மேலும் படிக்க | மணக்கோலத்தில் மணப்பெண் செய்த செயல்: ஷாக்கில் மணமகன், நாமும்தான்..வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News