நாகப்பாம்பு vs கீரி: ஆக்ரோஷமான சண்டையில் பாம்புவை பழி தீர்த்த கீரி

பாம்புடன் மோதும் கீரி ஒன்று அதனை விட்டுவிடக்கூடாது என சின்னாபின்னம் படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 9, 2023, 02:11 PM IST
  • கீரி பாம்புக்கு இடையே கடும் சண்டை
  • ஒன்றையொன்று ஆக்ரோஷ தாக்குதல்
  • இணையத்தில் வைரலான வீடியோ
நாகப்பாம்பு vs கீரி: ஆக்ரோஷமான சண்டையில் பாம்புவை பழி தீர்த்த கீரி title=

பாம்பைக் கண்டு படை நடுங்கினாலும் கம்பீரமாக எதிர்த்து நின்று சண்டைபோடுவதில் கில்லாடி கீரி. அதற்கு பாம்பைக் கண்டால் துளியும் பயமில்லை. எப்படியாவது அதனை அடித்து துவைத்து எடுக்கவே முற்படும். பாம்புடன் வம்புக்கு செல்வது என்றால் கீரிக்கு அவ்ளவு இஷ்டம். இவை இரண்டும் அடிக்கடி மோதுக் கொள்ளும். இது தொடர்பான வீடியோக்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் இருக்கும் நிலையில், இப்போது இரண்டும் மோதிக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்தச் சண்டையில் கூட இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை, பின்வாங்கவும் தயாராக இல்லை. கடுமையாக மோதிக் கொள்கின்றன.

மேலும் படிக்க | கண்ணாடி பார்த்து கன்பியூஸ் ஆன குரங்கு: குலுங்கி குலுங்கி சிரிப்பீங்க, வைரல் வீடியோ

இந்த வீடியோ ஓரளவு பழையது. யாரோ ஒருவரின் யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் சிறப்பு என்னவென்றால், இது மிகவும் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை ஒரு காட்டில் நடந்திருக்கிறது. மரங்கள் மற்றும் செடிகள் தவிர, சில காய்ந்த இலைகளும் அங்கு கிடப்பதை வீடியோவில் காணலாம். இதற்குள் இருவரும் எப்படி நேருக்கு நேர் வந்தார்கள் என்று தெரியவில்லை. மிகவும் தெளிவாக தெரிகிறது.

வீடியோவின் ஆரம்பத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடனேயே மோதலை ஆரம்பித்துவிடுகின்றன. சில நேரங்களில் முங்கூஸ் நாகப்பாம்பை அதன் தாடைகளில் அழுத்துகிறது. சில சமயங்களில் நாகப்பாம்பு கடுமையாக பதிலடி கொடுக்கிறது. ஒருவர் வெற்றி பெறுகிறார் என்று நீங்கள் நினைக்கும் போது, இன்னொருவர் தாக்க தொடங்குகிறார். இரண்டுக்கும் இடையிலான எதிர் தாக்குதல் இன்னும் பயங்கரமானதாக உள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் தகராறு முற்றிக் கொண்டே செல்கிறது.

சொல்லப்போனால், கடைசியில் இருவரும் சண்டையிட்டு களைப்படைந்தனர். இதில் இருவரும் தோற்கவில்லை. இறுதியில், முங்கூஸும் வேகத்தைக் குறைத்த நேரத்தில் நாகப்பாம்பும் வேகத்தைக் குறைத்தது. ஆனால் இதயம் பலவீனமானவர்கள் பார்க்கக்கூடாத சண்டை இது. இறுதியில் இருவரும் தனித்தனியாக செல்கிறார்கள். 

மேலும் படிக்க | நாய்க்காக சிறுவன் செய்த வேலை: ‘அந்த பையன் காவாலா’..நெகிழும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News