வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
நாம் நமது குழந்தைகளை எப்படி உருவாக்குகிறோமோ, அவர்கள் அப்படி வளர்கிறார்கள் என்று கூறுவார்கள். குழந்தைகளின் மனம் மென்மையானது. நமது விருப்பத்திற்கு ஏற்ப அதை எளிதாக வடிவமைக்க முடியும். ஆகையால் குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைகளிடம் நல்ல பண்புகளை வளர்ப்பது அவசியம். பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், கல்விக்கு அப்பாற்பட்ட ஒரு கலாச்சாரம் உள்ளது, அது வீடுகளில் இருந்து வருகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தரும் பழக்க வழங்கங்கள் அவர்களது குணத்தை உருவாக்குகின்றன.
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் பல வகையான வீடியோக்களை நாம் தினம் தினம் காண்கிறோம். இவற்றில் அவர்களின் வேடிக்கயான பாணிகளுடன் மிக சாதாரணமாக, மிக இயல்பாக, மிக யதார்த்தமாக, மிக அப்பவியாக செய்யும் சில வெலைகள் நம்மை நெகிழ வைத்து விடுகின்றன. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டுள்ளது.
மனதை உருக்கும் அந்த வீடியோவில் ஒரு சிறுவன் நாய்க்கு தண்ணீர் கொடுப்பதை காண முடிகின்றது. இதை பார்த்தால் நம் முகத்தில் தானாக புன்னகை பூக்கிறது.
நாய்க்கு தண்ணீர் கொடுத்த சிறுவன்
சமீபத்தில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிறுவன் நாய்க்குட்டியின் தாகத்தை தீர்க்க தன்னால் ஆன உதவியை செய்வதை காண முடிகின்றது. நாயின் தாகம் தீர்க்க ஒரு பம்பு குழாயில் உள்ள பெரிய பிடியை அழுத்தி, தண்ணீரை பம்ப் செய்து சிறுவன் நாய்க்கு தண்ணீர் கொடுப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த நாய்க்குட்டி தண்ணீர் வரும் இடத்தின் அருகே நீருக்காக காத்திருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது.
சிறுவனால் அந்த கோலை தேவையான அழுத்தம் கொடுத்து பம்ப் செய்ய முடியவில்லை. இருப்பினும், நாய்க்குட்டியின் மீது இரக்கம் காட்டி, அவன் தொடர்ந்து பம்பை அடித்து அதற்காக நீரை வரவழைக்கிறான். அவனது தொடர் முயற்சியால் சிறிய அளவு தண்ணீர் வெளியேறத் தொடங்குகிறது. இதனால் நாய் மகிழ்ச்சியுடன் சொட்டு சொட்டாக நீரை குடிக்க ஆரம்பிக்கிறது.
அற்புதமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:
“Every child you encounter is a divine appointment.” pic.twitter.com/FkXifyLmov
— Susanta Nanda (@susantananda3) June 30, 2023
சிறுவனை புகழ்ந்து தீர்த்த நெட்டிசன்கள், வைரல் ஆகும் வீடியோ
இந்த சிறுவனின் அற்புதமான வீடியோ சமூக ஊடக தள்மான ட்விட்டரில் இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தாவால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து அருகிறார்கள்.
‘இப்படிப்பட்ட எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘அந்த சிறுவனோட மனசு இருக்கே.. அதுதான் கடவுள்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் பட பாடலான ‘காவாலா’ பாடலுடன் இந்த வீடியோவை தொடர்பு படுத்திய பயனர் ஒருவர், ‘அந்த சிறுவனை போன்றவர்கள் சமூகத்துக்கு காவாலா’ என விளையாட்டாக எழுதியுள்ளார். காவாலா என்றால் தெலுங்கில் வேண்டும் என்று பொருள். ‘இந்த வீடியோ இதயத்தைத் தொட்டு விட்டது’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். இந்த சிறுன தனது அன்பான சைகை மற்றும் அப்பாவித்தனத்தால் இணையத்தில் வைரலாகி வருகிறான்.
மேலும் படிக்க | பூனைகள் பேசுமா? பேசுதே!! இணையவாசிகளுக்கு ஷாக்.... நம்ப முடியாத வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ