யூனிஃபார்மில் சிறுவன் ஆடிய ஆட்டம்.. அந்த ரியாக்‌ஷன்.. சான்சே இல்ல: வீடியோ வைரல்

Funny Dance Video: அற்புதமாக நடனமாடும் ஒரு கியூட் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2023, 02:04 PM IST
  • இந்த சுவாரஸ்யமான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் amol__lengare என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ 7.5 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது.
  • மேலும் 4.25 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
யூனிஃபார்மில் சிறுவன் ஆடிய ஆட்டம்.. அந்த ரியாக்‌ஷன்.. சான்சே இல்ல: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த இணைய உலகம் ஒரு தளத்தை வழங்கியுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்கள் வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

இணையத்தில் நடன வீடியோக்களுக்கென தனி கிரேஸ் உள்ளது. பல வித நடனங்களை ஆடி பலர் இங்கு அசத்தியுள்ளனர். சிறியவர்கள், பெரியவர்கள் என நடனத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட இணையம் உதவுகிறது. 

சிறு குழந்தைகளின் நடன வீடியோக்களைப் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். இந்த குழந்தைகளின் அப்பாவித்தனமான செயல்கள் மற்றும் இதயத்தைத் தொடும் ரியாக்‌ஷன்கள் மனங்களை கொள்ளைகொள்ளும். தற்போது அட்டகாசமாக நடனமாடும் சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்க்க மிகவும் நன்றாக உள்ளது. 

ஒரு சிறுவன், பள்ளி ஆடைகளை அணிந்து, பள்ளி பையை முதுகில் சுமந்து கொண்டு, அற்புதமான நடனம் ஆடுவதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த சிறுவன் தனது நடனம் மற்றும் வேடிக்கையான ரியாக்‌ஷன்களால் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அஹிராணி நாட்டுப்புறப் பாடலான 'மாலா பாய் தருத்யா பெட்லா நவர மஜன் நசீப் ஃபுடலாம் கானா...' (குடிகாரக் கணவனைச் சந்திப்பது) என்ற பாடலுக்கு இந்த சிறுவன் அற்புதமாக நடனமாடுகிறான். 

மேலும் படிக்க |முட்டை திருடப்போய் மட்டையான ஜோடி: பின்னிப்பெடலெடுத்த தாய் மயில்

சிறுவன் மாஸாக நடனமாடும் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவை 75 லட்சம் பேர் பார்த்துள்ளனர்

இந்த சுவாரஸ்யமான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் amol__lengare என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ 7.5 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது, மேலும் 4.25 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. வீடியோவில் காணப்படும் சிறுவனின் அப்பாவித்தனமான நடனத்தை பார்த்தால், இந்த வயதில் வாழ்க்கை எவ்வளவு கவலையற்றதாக இருக்கிறது என்று நமக்கும் தோன்றுகிறது. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அளித்து சிறுவனை பாராட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாம்பையே பதம் பார்த்த பாம்பு கழுகு..பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News