டோக்கியோ ஒலிம்பிக்ஸில் கலந்துக் கொள்ள வந்திருப்பவர்களுக்கு சுமார் ஒன்றரை லட்சம் ஆணுறைகளை ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றனர். அவை சுவாரஸ்யத்தையும் கூட்டுகின்றன. ஆணுறைகளை எதற்கு பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்தலாம்? டோக்கியோ ஒலிம்பிக்கில் வீராங்கனை ஒருவர் ஆணுறையை (condom) பயன்படுத்தும் வீடியோ ஒன்று வைரலாகிறது.
தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றார் படகுப் போட்டியில் (women's C1 canoeing slalom பிரிவில்) கலந்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை. மகளிர் சி 1 கேனோயிங் ஸ்லாலோம் (women's C1 canoeing slalom) இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார். இவர் women's kayaking K-1 பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
Also Read | sex at Olympics: ஒலிம்பிக் போட்டிகளில் ஆணுறைகள் மற்றும் செக்ஸ் விழிப்புணர்வு
ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் விநியோகிக்கப்பட்ட ஆணுறைகள் ஜெஸ்ஸிகா ஃபாக்ஸ் என்ற வீராங்கனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இவர் இந்த ஒலிம்பிக்கில் இரண்டு பதங்கள் பெறவும் ஆணுறை தான் காரணம் தெரியுமா?
அப்படி என்ன நடந்தது என்ற கேள்வி எழுகிறதா? தனது படகை சரி செய்வதற்காக ஒலிம்பிக் தங்க மங்கை பயன்படுத்தியது காண்டம் என்னும் ஆணுறையைத் தான்!
டிக்டாக்கில் வெளியிடப்பட்ட ஒரு சில விநாடிகள் மட்டுமே செல்லும் வீடியோவில், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை தனது படகை எப்படி சரிசெய்தார் என்பதை வெளிப்படுத்தியது.
"படகை பழுதுபார்க்க ஆணுறைகளை பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியாது" என்று வாசகத்தோடு இந்த வீடியோ வெளியானது. "ஆணுறையை பயன்படுத்தி படகை பழுதுபார்ப்பது" (How kayakers use condoms) என்று எழுதி இந்த வீடியோவை வீராங்கனை வெளியிட்டார்.
Previene ETS y también ayuda a ganar medallas olímpicas. #Tokyo2020
Jessica Fox #AUS arregló su kayak con un preservativo y GANÓ EL en #CanoeSlalom pic.twitter.com/QrTX1YL8k0
— Andrés Yossen (@FinoYossen) July 30, 2021
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது படகை ஆணுறை கொண்டு சரிசெய்தார். அன்று நடந்த போட்டியில் வெண்கலம் வென்றார். வியாழக்கிழமை வேறொரு பிரிவுக்கான படகு போட்டியில் கலநதுக் கொண்டு ஜெசிகா தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன்னரே இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டிலும் பதக்கம் வென்றார் ஜெசிகா. 2012 லண்டன் விளையாட்டுகளில் வெள்ளியும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றிருக்கிறார்.
பொதுவாகவே ஆணுறைகள் எளிதாக இலகக்கூடிய ரப்பரால் செய்யப்பட்டிருக்கும். உடலுறவின் போது ஆண்கள் ஆணுறைகளை பயன்படுத்தும்போது, உறுப்புக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மை கொண்டது. சிறப்பான நெகிழ்வுத் தன்மை கொண்டது ஆணுறை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
குடும்பக் கட்டுப்பாட்டிற்காகவும், நோய்கள் பரவாமலும் தடுக்க பயன்படும் ஆணுறைகள், ஒலிம்பிக் போட்டிகளில் வெல்ல ஒரு பெண்ணுக்கு பயன்பட்டிருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.
Also Read | Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR