Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?

கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டால் அது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) என்ற நிலையை ஏற்படுத்தும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2021, 05:16 PM IST
  • ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்
  • கடுமையான ஒவ்வாமை அனாபிலாக்ஸிஸ் என்ற நிலையை ஏற்படுத்தும்
  • அனாபிலாக்ஸிஸ் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்
Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?   title=

நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல், பிரச்சனை ஏற்படுத்தும் எதுவும் ஒவ்வாமை எனப்படும். மனித உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் உண்டாகும் கோளாறினால் ஏற்படுவது ஒவ்வாமை. சுற்றுச்சூழலில் இருக்கின்ற சில பொருட்களால் ஒவ்வாமை ஏற்படலாம். சில உணவுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

ஒவ்வாமையின் அளவைப் பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடும். உடலில் வீக்கம், தும்மல், அரிப்பு, குமட்டல் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும். பொதுவாக நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு சுற்றுச்சூழலுடன் இணைந்து செயல்படும்போது பிரச்சனை இல்லை. அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடல்நிலை சீர்குலையும். 

உணவுப்பொருட்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையினால், உடலில் வீக்கம், படை நோய், குமட்டல், சோர்வு, வாந்தி என பலவிதமான விளைவுகள் ஏற்படும். உணவு ஒவ்வாமை இருப்பதை உணர சிறிது நேரம் ஆகலாம். உணவு உண்ட பிறகு, உடல்நிலை திடீரென மோசமடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். 

Also Read | Brain Foods: ஞாபக சக்தி அதிகரிக்க இந்த ‘5’ உணவுகள் அவசியம்

காய்ச்சல் மற்றும் சளி, மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவப்பது அல்லது வீங்குவது ஆகியவையும் ஒவ்வாமையாக இருக்கலாம். பெரும்பாலான நேரங்களில், இந்த அறிகுறிகளை கை வைத்தியமாகவே வீட்டிலேயே சரி செய்துவிடமுடியும்.  

கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டால் அது அனாபிலாக்ஸிஸ் (anaphylaxis) என்ற நிலையை ஏற்படுத்தும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும், நினைவு இழப்புக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளவும்.  

உடல் சருமத்தில் ஏற்படும் சிக்கல், ஒவ்வாமையின் அறிகுறியாக இருக்கலாம். ஒவ்வாமை பொதுவாக பரம்பரையாக வருவது, மரபணுக்கள் மூலம் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு பரம்பரையாக வரலாம். ஆனால் பெற்றோருக்கு இருந்தால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை வர வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை.

Also Read | தினசரி உணவில் சோளத்தை சேர்த்தால் நோயே நெருங்காது

செல்லப் பிராணிகளிடம் இருந்தும், தூசி மற்றும் காற்று மூலமும் ஒவ்வாமை ஏற்படலாம். கரப்பான் பூச்சிகள் ஒவ்வாமை ஏற்படுத்தும் மிகப் பெரிய காரணி என்றே சொல்லலாம்.  

மருந்துகளும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பென்சிலின் மற்றும் சல்பா மருந்துகள் பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்துபவை. கோதுமை, கொட்டை வகைகள், பால், ஓடுள்ள உணவுவகைகள் மற்றும் முட்டை ஆகியவை பொதுவாக ஒவ்வாமை ஏற்படுத்துபவை.

தேனீக்கள், குளவிகள்,கொசுக்கள் போன்றவை கொட்டுவதாலும் அலர்ஜி ஏற்படும். செடிகள். புல், களைகள் மற்றும் மரங்களிலிருந்து வரும் மகரந்தங்கள் மற்றும் நச்சுத் தாவரங்களிலிருந்து வரும் பிசின்கள் தாவர ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.  

Also Read | பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சி சாப்பிடலாமா? அதனால் ஏற்படும் அபாயம் என்ன?

லேடெக்ஸ் (Latex) ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இது கையுறைகள் மற்றும் ஆணுறைகளில் (condoms) காணப்படுகிறது. லேடெக்ஸ் (Latex) என்பது மரப்பால் ஆகும். இது ரப்பர் மரத்தின் பாலில் உள்ள இயற்கையான பொருள்.

பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நச்சுகள் ஆகியவற்றிலிருந்து உடலைக் காக்கும் நோயெதிர்ப்பு அமைப்பை லேடெக்ஸ் பாதிக்கலாம். இது உடலில் உயர் உணர்திறன் (hypersensitivity) உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது லேடெக்ஸ் ஒவ்வாமை எனப்படுகிறது.

நிக்கல் போன்ற உலோகங்களும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.பருவகால ஒவ்வாமை மிகவும் பொதுவானது. இவை தாவரங்களால் வெளியாகும் மகரந்தத்தால் ஏற்படுகின்றன. ஒவ்வாமைகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, எதிர்வினையைத் தூண்டும் எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பதுதான்...

Also Read | Health Tips: ‘இந்த’ உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது; ஏன் தெரியுமா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News