தெருவில் ஆடிய கோமாளிகளை தெறிக்கவிட்ட தெருநாய் வீடியோ வைரல்

தெருவில் ஆட்டம்போட்ட கோமாளிகளை தெருநாய் ஒன்று குறைத்து தெறிக்க விட்ட வீடியோ இணையவாசிகளை வயிறு குலங்க சிரிக்க வைத்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 16, 2022, 08:38 AM IST
  • கோமாளியை துரத்தும் நாய்
  • பயந்து ஓடும் கோமாளிகள்
  • இணையத்தை கலக்கும் வீடியோ
தெருவில் ஆடிய கோமாளிகளை தெறிக்கவிட்ட தெருநாய் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோக்களுக்கு இணையத்தில் என்றுமே பஞ்சமில்லை. நாள்தோறும் ஏதாவதொரு வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து இணைய டிரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். அந்தவகையில், தெருநாய் ஒன்று, தன் தெருவில் வந்து வேஷம்போட்டு ஆடிய கோமாளிகளை பார்த்து குறைத்து தலை தெறிக்க ஓட வைத்த வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. வீடியோவை பார்த்தவர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். உங்களுக்கு மனதார சிரிப்பு வேண்டும் என்றால், இந்த வீடியோ நிச்சயம் அத்தகைய சிரிப்பை கொடுக்கும். 

மேலும் படிக்க | Viral Video : திருமண விழா மேடையில் நடனம்... அப்படியே மயங்கி விழுந்த பெண் மரணம்

@Fun_Viral_Vids என்ற டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. Run...Runnnn என்ற கேப்சனுடன் சிரிப்பு சிமிலியுடன் போடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் கோமாளி வேஷம் போட்டு இருவர் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். இசைக்கு ஏற்ப காமெடியாக அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்க, அப்பகுதியில் இருக்கும் மக்களும் வீடியோ எடுத்து, கோமாளிகள் ஆடுவதை மகிழ்வுடன் கண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் யார் பார்த்த வேலையோ தெரியவில்லை, திடீரென அங்கு ஒரு நாய் கடும் கோபத்துடன் வந்துவிடுகிறது.

ஆடிக் கொண்டிருக்கும் கோமாளிகளுக்கு உச்சக்கட்டம் பயம் ஏற்பட, நாயின் குறைப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், நாயானது, நான் குறைத்துக் கொண்டே இருக்கிறேன், என்னை மதிக்காமல் ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள் என இன்னும் கோபத்தின் உச்சத்துக்கு சென்று ஆவேசத்துடன் குறைத்தது மட்டுமல்லாமல், அந்த கோமாளிகளை கடிக்கவும் முற்படுகிறது. அந்த நொடிபொழுதில் நாயின் மைண்ட் வாய்ஸை படித்த கோமாளிகள் இருவரும், இதற்கு மேல் இருந்தால் நமக்கு நேரம் சரியில்லை என வந்த வழியே பாய்ந்தடித்து ஒடுகின்றனர். இந்த வீடியோ இதுவரை டிவிட்டரில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளை பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | பூனையின் வாலில் பற்றிய தீ; பரிதவிக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ!

Trending News