பூனையின் வாலில் பற்றிய தீ; பரிதவிக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ!

Viral Video: பூனையின் வாலில் தீப்பிடித்த நிலையில், அதற்கு உதவி செய்ய நாய் ஒன்று முயலும் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2022, 06:54 PM IST
  • வால் தீப்பிடித்து எரிந்த நிலையில் பூனை பதற்றமில்லாமல் கையாண்டது
  • உதவி செய்ய நாய் ஒன்றும் முயற்சிக்கிறது.
  • இந்த வீடியோவை ஏற்கனவே 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
பூனையின் வாலில் பற்றிய தீ; பரிதவிக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ! title=

சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுவதாக உள்ளன. இத்தகைய காணொளிகள் பெரும்பாலும் மக்களின் சலிப்பான வாழ்க்கையில் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் இந்த மாதிரியான வைரல் வீடியோக்களைப் பார்ப்பதிலேயே மக்கள் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் எனலாம். அதிலும் நாய்கள் மற்றும் பூனைகளின் வீடியோக்களை மக்கள் விரும்புகிறார்கள். அவற்றின் குறும்புத்தனமும் அழகாவும் விலங்கு வீடியோக்களில் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. மேலும் அவர்கள் எப்போது என்ன செய்கிறார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுவும் இதுபோன்ற வீடியோக்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.

நாய்கள் மற்றும் பூனைகள் பொதுவாக எதிரிகள். ஒரே வீட்டில் வளர்க்கப்பட்டாலும் இரண்டுக்கும் எப்போதும் சண்டை சச்சரவுகள் குறையாமல் இருக்கும். நாய் பொதுவாக பூனையை இரையாகப் பார்ப்பதாலும், அவற்றை வேட்டையாடும் போக்கு இருப்பதாலும் இந்தப் பிரச்சனைகள் எழுவதாக பொதுவாக நம்பப்படுகிறது. பூனைகள் பெரும்பாலும் நாய்களை எரிச்சலூட்டுவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் தற்போது பூனையின் வாலில் தீப்பிடித்துக்கொண்ட நிலையில், நாய் ஒன்று அதற்கு உதவ முயல்வது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

வைரலான வீடியோவைக் கீழே காணலாம்:

இசையமைப்பாளர் ரஹீம் டிவோன் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் வரவேற்பறையில் ஒரு பூனையும் பூனையும் அமர்ந்துள்ளன. பூனை மேஜையில் அமர்ந்திருக்கிறது. அப்போது மேசையில் இருந்த மெழுகுவர்த்தியில் இருந்து பூனையின் வால் தீப்பிடித்தது. நாய் இதைப் பார்த்து உதவிக்கு கூப்பிடும் வகையில் ஆங்கும் இங்கும் ஓடுகிறது. ஆனால் பூனை அமைதியாக இருக்கிறது. மேலும் நெருப்பு தானே அணைத்து கொள்கிறது. இந்த வீடியோவை ஏற்கனவே 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News