Viral Video: கூட்டு களவாணிகள் என்றால் இவர்கள் தானோ... சிறுமியை அலர்ட் செய்யும் நாய்!

Viral Video: இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அவை பெரும்பாலும், வேடிக்கையான வினோதமான வீடியோக்கள் தான். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 19, 2022, 02:11 PM IST
  • அனைவரின் மனம் கவர்ந்த வைரல் வீடியோ.
  • சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை.
  • நாய் ஒன்று சிறுமிக்கு அலர்ட் கொடுத்து காப்பாற்றும் வீடியோ
Viral Video: கூட்டு களவாணிகள் என்றால் இவர்கள் தானோ... சிறுமியை அலர்ட் செய்யும் நாய்! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. அவற்றில் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அவை பெரும்பாலும், வேடிக்கையான வினோதமான வீடியோக்கள் தான். அந்த வகையில், நாய் ஒன்று சிறுமிக்கு அலர்ட் கொடுத்து காப்பாற்றும் வீடியோ  மிகவும் வைரலாகி வருகிறது. 

நாய்க்கும் சிறுமிக்கும் இடையே உள்ள அபிமான பந்தம் இணையவாசிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. வீட்டுப் பாடத்தைச் செய்யுமாறு செல்ல நாய் ஒன்று சிறுமிக்கு நினைவூட்டும் பழைய வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது. Yoda4ever ஆல் ட்விட்டரில் வெளியிடப்பட்டது. வீடியோவில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் தனது குட்டி நண்பரான சிறுமியை தனது சமிக்ஜை மூலம், மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்ற உதவுவதை  காட்டுகிறது. நாய் சிறுமியின் அப்பா நெருங்கி வரும் காலடிச் சத்தங்களைக் கேட்ட உடன், வீட்டில்  வீட்டு பாடத்தை முடிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை விரைவாக எச்சரித்து வீட்டுப்பாடம் செய்ய நினைவூட்டியது. அழகான வீடியோ ஆன்லைனில் இதயங்களை வென்று வருகிறது.

மேலும் படிக்க | உண்மை காதலுக்கு வயதில்லை... 52 வயது பெண்மணியை மணந்த 21 வயது இளைஞன்!

வீடியோ பதிவில், இவர்கள் கூட்டுக் களவாணிகள்" என்று தலைப்பு எழுதப்பட்டுள்ளது. 1 நாளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ பல லைக்குகள் மற்றும் கமெண்ட்களுடன் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.

அனைவரின் மனம் கவர்ந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோவில், "நாய் அவளை எச்சரிப்பதை, பார்த்தால், அடிப்படையில் அவளுடைய சிறிந்த தோழன் என்பது நிச்சயம் உங்களுக்கு புரியும், ஆனால் அதே சமயம் சிறுமியையும் நாயையும் உரிமையாளர் கண்டு கொள்ளாமல் நடந்து செல்வதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அப்பா வீட்டிற்கு வரும்போது தங்கள் மகளுக்கு ஹாய் கூட சொல்ல மாட்டீர்களாக என்ன??? மிகவும் வினோதமான மனிதர்." எனவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.  ஆனால், "துரதிர்ஷ்டவசமாக நாய்க்கும் சிறுமிக்கும் கேமரா இருப்பது பற்றி தெரியவில்லை" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News