ஆடிய மணப்பெண், அசந்துபோய் அழத்தொடங்கிய மணமகன்: வைரல் வீடியோ

Viral Video: திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும். அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தருணம் சமீபத்தில் கேமராவில் பதிவானது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2022, 02:41 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
ஆடிய மணப்பெண், அசந்துபோய் அழத்தொடங்கிய மணமகன்: வைரல் வீடியோ title=

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் மிக முக்கியமான ஒரு நாளாகும். இதற்காக அவர்கள் பல ஏற்பாடுகளை செய்வதுண்டு. தங்கள் உடை, மண்டபத்துக்குள் வரும் விதம், நடனங்கள் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், சில சமயம், எதிர்பாராத சில விஷயங்களும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கின்றன. 

திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும். அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தருணம் சமீபத்தில் கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காண்பவர்கள் கண்களையும் ஈரமாக்கலாம். 

தனக்காக திருமணத்தில் நடனமாடும் தன் மணமகளை பார்த்து மணமகன் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை இந்த பதிவில் காண முடிகின்றது.

மணமகன் தனது குடும்பத்துடன் திருமண மண்டபத்தை அடைந்தபோது, ​​மணமகள் அவருக்காக ஒரு நடன நிகழ்ச்சியை அர்ப்பணித்து அவரை ஆச்சரியப்படுத்தினார். மணமகள், இளஞ்சிவப்பு நிற லெஹங்காவில், ஒரு பாடலுக்கு நடனமாடுவதைக் காண முடிகின்றது. மணமகள் தனக்காக ஆடுவதைப் பார்த்த மணமகன் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்குகிறார். மணமகன் அழுவதைப் பார்த்த மணமகள் அவரது கண்ணீரை துடைத்து விடுவது மிகவும் கியூட்டாக உள்ளது. 

மேலும் படிக்க | மணமகளின் வேற லெவல் குத்தாட்டம்: வாயடைத்து போன மணமகன், வைரலான வீடியோ  

இந்த வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. 

மணமகன் மணமகளின் அந்த கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த ஜோடியின் அழகான ரியாக்‌ஷன் சமூக ஊடகங்களில் இதயங்களைக் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ 39,000 க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வைரலாகியுள்ளது. இந்த ஜோடியின் அன்பு மற்றும் காதலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 

இருவரும் அதிர்ஷ்டசாலிகள் என பலர் கமெண்ட் செய்துள்ளனர். இருவரின் முக பாவங்களும், செயல்களும் இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் எனதை எடுத்துக்காட்டுகிறது. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி சொன்ன நாய்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News