Lockdown நேரத்தை வீணடிக்காமல் இந்தி ஆசிரியராக மாறிய ஹார்டிக் பாண்ட்யா...

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா தனது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக் இந்தி கற்பிக்க முழு அடைப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது அவருடைய சமீபத்திய வீடியோ நமக்கு காண்பிக்கிறது.

Last Updated : Apr 14, 2020, 11:07 AM IST
  • உலகெங்கிலும் உள்ள விளையாட்டு நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தங்கள் வீட்டு இடத்தில் ஒரு தற்காலிக உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
  • ஹார்டிக், தனது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக், சகோதரர் க்ருனால் மற்றும் அவரது மனைவி பங்கூரி ஆகியோர் வீட்டு ஜிம்மில் பணிபுரியும் படங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டனர்.
Lockdown நேரத்தை வீணடிக்காமல் இந்தி ஆசிரியராக மாறிய ஹார்டிக் பாண்ட்யா... title=

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா தனது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக் இந்தி கற்பிக்க முழு அடைப்பு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது அவருடைய சமீபத்திய வீடியோ நமக்கு காண்பிக்கிறது.

முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் முழு உடற்தகுதிக்கு திரும்பிய பாண்ட்யா, தற்போது தனது குடும்பத்தினருடன் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். இந்நிலையில் தனது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக் சில மதிப்புமிக்க இந்தி பாடங்களைக் கொடுத்து பாண்ட்யா தனது நேரத்தை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார்.

நட்சத்திர இந்திய ஆல்ரவுண்டர் தனது ரசிகர்களை வழக்கமான சமூக ஊடக இடுகைகள் மூலம் அவ்வப்போது மகிழ்வித்து வருகிறார். அந்த வரிசையில், அவரது சமீபத்திய பதிவில் 26 வயதான நடாசாவிடம் அவர் ‘தான் அவருக்கு என்று’ இந்தியில் கேட்பதையும், அதற்கு அவர் இந்தியில் பதில் அளிப்பதும் நாம் பார்க்க இயலும். நடாசா ஒரு செர்பிய நடிகை ஆவர், மற்றும் 2020 புத்தாண்டு தினத்தில் ஹார்டியாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 

இந்நிலையில் தற்போது ஹார்டிக் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சிறிய வீடியோ கிளிப்பில், நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் நடாசாவிடம் “பேபி, மெயின் க்யா ஹு தேரா? (பேபி, நான் உங்களுக்கு என்ன வேண்டும்?)” என கேட்க, அதற்கு  நட்டாசாவின் பதில் ஹார்டிக்கின் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. "ஜிகர் கா துக்டா(என் இதயத்தின் ஒரு பகுதி)" என்று நடாசா தனது பதிலில் கூறினார், அதன் பிறகு ஹார்டிக் சிரிப்பின் அலையில் மூழ்குவதை நாம் காணலாம்.

உலகெங்கிலும் உள்ள விளையாட்டு நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்ட அல்லது ரத்துசெய்யப்பட்ட நிலையில், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தங்கள் வீட்டு இடத்தில் ஒரு தற்காலிக உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஹார்டிக், தனது வருங்கால மனைவி நடாசா ஸ்டான்கோவிக், சகோதரர் க்ருனால் மற்றும் அவரது மனைவி பங்கூரி ஆகியோர் வீட்டு ஜிம்மில் பணிபுரியும் படங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டனர். 

ஹார்டிக் மற்றும் நடாசா இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஒருவருக்கொருவர் நிச்சயதார்த்தம் செய்தனர். ஹார்டிக் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை, தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை 2019 செப்டம்பர் 22 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். குறைந்த முதுகுவலி அறுவை சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார், மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால் தொடர் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு அவர் மீண்டும் போட்டிகளுக்கு திரும்ப அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News