‘கரு’ மூலம் தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் -சாய் பல்லவி

தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு ‘கரு’ படத்தில் நடித்துள்ளேன். 

Updated: Mar 13, 2018, 04:59 PM IST
‘கரு’ மூலம் தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் -சாய் பல்லவி
Pic Courtesy : Twitter

‘வனமகன்’ படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கி வரும் படம் ‘கரு’. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

வெளியானது "கரு" ட்ரைலர்!

ஏற்கனவே ‘கரு’படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ரை பிரபு தேவா வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 

இந்த படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவி மலையாள படம் ப்ரேமம் மூலம் சினிமா துறைக்கு வந்தவர். இந்த படம் மூலம் மிகவும் பிரபலமானார். ‘கரு’ படத்தின் கதை ஒரு பெண்ணை மையப்படுத்தி இருப்பதால், தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு நடித்து முடித்துள்ளேன். மேலும் இந்த படத்த்தின் கதை கேட்கும் போது எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரிவித்துள்ளார்.