நோபல் பரிசை ரூ.800 கோடிக்கு விற்ற பத்திரிகையாளர்; மனம் நெகிழ வைக்கும் காரணம்

டிமிட்ரி 2021 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். கருத்துச் சுதந்திரத்தை காக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டி  அவருக்கு இந்த பரிசு கிடைத்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2022, 07:05 PM IST
  • உக்ரைன் போரின் தாக்கம் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது.
  • டிமிட்ரி 2021 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.
  • உக்ரைனில் நடந்த போரினால் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்கள்.
நோபல் பரிசை ரூ.800 கோடிக்கு விற்ற பத்திரிகையாளர்; மனம் நெகிழ வைக்கும் காரணம் title=

நோபல் பரிசு பெறுவது மிகவும் பெருமைக்குரிய விஷயம், ஆனால் ஒரு பத்திரிகையாளர் விலை மதிக்க முடியாத அந்த பரிசை விற்றுவிட்டார். இதற்கான காரணம் தெரிந்தால், உங்கள் பார்வையில் அவருடைய மதிப்பும் மரியாதையும், 100 மடங்கு அதிகரிக்கும். இந்த நபர் மக்களுக்கு உதவுவதற்காக தனது நோபல் பரிசை விற்றார். நோபல் பரிசு பாரம்பரிய ஏலத்தில் விற்கப்பட்டது. ஏலத்தில் பத்திரிகையாளருக்கு 800 கோடி கிடைத்தது.

இந்த பத்திரிகையாளரின் பெயர் டிமிட்ரி முரடோவ். ரஷ்யாவைச் சேர்ந்த இவர் நோவயா கெஸெட்டா என்ற பத்திரிகையில் பணிபுரிகிறார். உக்ரைனில் நடந்த போரினால் வீடுகளையும் உடமைகளையும் இழந்த மக்களுக்கு உதவ ஏலத்தில் கிடைக்கும் பணத்தை தருவதாக டிமிட்ரி கூறினார்.

டிமிட்ரி 2021 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். கருத்துச் சுதந்திரத்தை காக்க அவர் எடுத்த நடவடிக்கை காரணமாக இது அவருக்குக் இந்த பரிசு கிடைத்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு அவரது செய்தித்தாள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, ​​உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை யாராவது போர் என்று குறிப்பிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என ரஷ்ய அரசு தெரிவித்திருந்தது. ரஷ்ய அரசாங்கம் தனது நடவடிக்கையை ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று விவரிக்கிறது.

மேலும் படிக்க | உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

நியூயார்க்கில் தனது தங்கப் பதக்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் யுனிசெஃப் நிறுவனத்திற்கு உதவும் என்று ஹெரிடேஜ் ஏலம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இதனைக் கொண்டு உதவ முடியும்.

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போரை தொடக்கிய நிலையில்,  நான்கு மாத காலங்களாக போர் தொடர்கிறது. இதனால், லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். உக்ரைனின் பல நகரங்கள் ரஷ்யாவின் தாக்குதலால் சீரழிந்து போயுள்ளன. 

மேலும், போரின் தாக்கம் உலகம் முழுவதிலும் காணப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பல நாடுகள் பெட்ரோல் டீசல விலைகள் மிகவும் அதிகரித்துள்ளன. போரினால், உணவு பொருட்களின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News