முத்தம் இனிக்குமா? கசக்குமா? பாம்பை முத்தமிடும் பெண்ணிடம் கேட்கலாமா?

அழகான பெண் தனது செல்லப் பாம்புக்கு லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் "Love my snake!" வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 5, 2021, 07:37 PM IST
  • பாம்பை முத்தமிடும் பெண்
  • அதிர்ச்சியில் வாயை திறக்கும் பாம்பு
  • இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பாம்பு முத்த வீடியோ
முத்தம் இனிக்குமா? கசக்குமா? பாம்பை முத்தமிடும் பெண்ணிடம் கேட்கலாமா? title=

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி என்ற பாரதியாரின் பாடல் மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த வீடியோ. பாம்புக்கு முத்தம் கொடுக்கும் இளம்பெண்ணின் வீடியோ, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவில், பாம்பின் தலை பெண்ணின் உதட்டுக்கு அருகில் வருவது தெரிகிறது. பாம்பிற்கு பெண் முத்தமிட்டதும், ஆச்சரியத்தில் பாம்பின் வாய் திறப்பதும் தெரிந்தால், அந்த வீடியோ வைரலாகாமல் என்ன செய்யும்?

பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்கும் கதை நமக்கு ராமநாராயணன் காலத்தில் இருந்தே தெரியும். ஆனால், அதற்கு முத்தமிடும் பெண்ணின் வீடியோவை யாராவது பார்த்ததுண்டா? இது ரீல் படம் இல்லை, பாம்பின் ரியல் வீடியோ படம் என்பதால் தான் இந்த பாம்பு முத்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

 
'royal pythons' என்ற கணக்கில் இருந்து, "Love my snake!" என்ற தலைப்பில் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில், பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவில், அழகான பெண் தனது செல்லப் பாம்புடன் இருப்பதைக் காணலாம்.

Also Read | படுக்கையறையில் சீறும் பாம்பின் சப்தம் ஏற்படுத்திய காமெடி கலாட்டா!

மெதுவாக பாம்பின் தலை பெண்ணின் வாய் அருகே வருவது வீடியோவில் தெரிகிறது. அதன் கன்னத்தில் பெண் முத்தமிட்டதும், பாம்பின் வாய் ஆச்சரியத்தில் திறக்கிறது. அதைப் பார்க்கும் பெண்ணும், பாம்பைப் போலவே தனது முகத்திலும் ஆச்சரியத்தைக் காண்பிக்கிறார்.

பிறகு, அந்த இளம்பெண், சிரித்துக்கொண்டே தன் பாம்பிடம், "ஐ லவ் யூ" என்று சொல்லி மீண்டும் முத்தமிடுகிறாள். அப்போதுதான் பாம்பு வாயை மூடிக் கொள்கிறது. அதன் பிறகு அந்த பாம்பும் பெண்ணின் கன்னத்தில் முத்தமிடுவதுபோல் செய்துவிட்டு நகர்கிறது. பாம்பு தனது கன்னத்தை தொடும்போது, தனது செல்லப்பிராணியின் "Awww" என்று அந்த பாம்பின் தோழி சொல்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து அதிரும் சமூக ஊடக பயனர்கள் பல்வேறு எமோஜிகளுடன் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், சிலர் பாம்பைப் போன்ற ஒரு விஷ ஜந்துவை எப்படி முத்தமிடுகிறார் இந்தப் பெண் என்று அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Also Read | படுக்கையறையில் சீறும் பாம்பின் சப்தம் ஏற்படுத்திய காமெடி கலாட்டா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News