Bizarre sound! படுக்கையறையில் சீறும் பாம்பின் சப்தம் ஏற்படுத்திய காமெடி கலாட்டா!

பாம்பு சீறினால் பயப்படாமல் இருக்க முடியுமா? இதைப்போய் நக்கலடிக்கலாமா? என்ன கொடுமை சார் இது!!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 31, 2021, 02:46 PM IST
  • சீறுவதெல்லாம் பாம்பல்ல!
  • பாம்பென்றால் படையும் நடுங்கும்
  • பாம்பென்று போனால் அது பழுதானது
Bizarre sound! படுக்கையறையில் சீறும் பாம்பின் சப்தம் ஏற்படுத்திய காமெடி கலாட்டா! title=

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். படைவீரர்களையே நடுங்கச் செய்யும் அந்த சீறும் சப்தம், வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு பீதியை ஏற்படுத்தியது என்றால் அதில் தவறொன்றும் இல்லையே! ஆனால் அந்த பீதியின் முடிவு, காமெடி கலாட்டாவாக மாறியது தான் வைரல் செய்தியாக மாறியது. இது சிங்கப்பூர் பாம்பின் கதை...

படுக்கையறையில் இருந்து பாம்பு சீறும் சத்தம் கேட்டு, பயந்துபோன ஒரு பெண், மீட்புக் குழுவினருக்கு போன் செய்துவிட்டார். விரைந்து வந்த மீட்பு குழுவினர், பாம்பை பிடிக்க முன்னேற்பாடுகளுடன் மீட்பு நடவடிக்கையை தொடங்கினார்கள். 
ஆனல் கடைசியில் படுக்கையறையில் இருந்து வெளியே வந்த அனைவரின் முகத்திலும் அசடு வழிந்தது...

பாம்பா பழுதா என்று தெரியாவிட்டாலும், பாம்பு என்று நினைத்துவிட்டால் வேர்த்து விறுவிறுத்துத் தானே போகும்? அசடு வழைந்தது ஏன் என்று கேட்கிறீர்களா?  

READ ALSO | பாம்பு சட்டை உரித்ததை பார்த்திருக்கிறீர்களா..!!

npr.org வெளியிட்டுள்ள செய்தியின்படி, வீட்டின் படுக்கையறையில் இருந்து பாம்பின் சீறும் சப்தம் கேட்ட ஒரு பெண், மீட்புக் குழுவினருக்கு போன் செய்துவிட்டு காத்திருந்தார். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து நாகப்பாம்பைத் தேடத் தொடங்கியபோது, ​​​​சத்தம் நாகப்பாம்பின் ஒலி அல்ல, ஆனால் அந்த பெண் பயன்படுத்தும் பொருளில் இருந்து வந்தது என்று தெரிந்ததும் கலாட்டாவாக மாறியது.
 
உண்மையில், அந்தப் பெண் நாகப்பாம்பின் சீற்றம் என்று எண்ணியது அந்த பெண் தினசரி பல் துலக்க பயன்படுத்தும் மின்சார பல் துலக்கியின் (Electric Toothbrush) சப்தம்.  மின்சாரத்தில் இயங்கும் பல்லை சுத்தப்படுத்தும் பிரஷ்ஷுக்குள் (Electric Toothbrush) தண்ணீர் போய்விட்டதால், அதில் இருந்து சத்தம் வந்தது. அது பாம்பின் சீற்றத்தைப் போல இருந்ததால் பெண் பயந்துவிட்டார்.

மீட்புக் குழுவினர் பெண்ணின் படுக்கையறையில் பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டபோது, பாம்பு அகப்படவில்லை. ஆனால் சப்தம் மட்டும் வந்துக் கொண்டே இருந்தது. 

ALSO READ | கதவில் ஒய்யாரமாய் ஆடி மாஸ் காட்டிய பாம்பு, வைரலான வீடியோ

பிரஷ்ஷில் இருந்து ஓசை வந்ததால், அதை எடுத்து சோதித்து பார்த்தபோது, அது நஞ்சைக் கக்கும் பாம்பு சப்தம் அல்ல என்பதும், வாயில் இருந்து நாற்றத்தை அகற்றும் டூத் பிரச்ஷின் ஒலி என்றும் தெரியவந்தது.

அந்த பிரஷ்ஷை படு எச்சரிக்கையுடன் சோதித்துப் பார்த்ததில், மின்சாரத்தில் இயங்கும் டூத் பிரஷ்ஷின் பேட்டரி பகுதிக்குள் தண்ணீர் சென்றிருந்தது. இந்த விஷயத்தை மீட்புக் குழுவினர், புகார் செய்த பெண்ணிடம் தெரிவித்தபோது, அவர் முகத்தில் அசடு வழிந்தது மட்டுமல்ல, முகமும் வெட்கத்தால் சிவந்து போனதாம். இந்த விஷயம் நடந்து பல காலம் ஆகிவிட்டாலும், சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தியாக மாறிவிட்டது.

Also Read | போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News