ஐயோ அம்மா என்ன விட்டுடுமா என இளம் பெண்ணிடம் கதறும் சிங்கம் வீடியோ வைரல்

சிங்கத்தை பூனைக்குட்டி போல் தூக்கிச் செல்லும் இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில்  படு வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 2, 2023, 07:00 PM IST
  • இளம் பெண்ணிடம் கதறும் சிங்கம்
  • தைரியமாக தூக்கிச் செல்கிறார்
  • இணையத்தில் வீடியோவுக்கு வரவேற்பு
ஐயோ அம்மா என்ன விட்டுடுமா என இளம் பெண்ணிடம் கதறும் சிங்கம் வீடியோ வைரல் title=

சிங்கப் பெண் என்ற டைட்டில் இந்த வீடியோவில் வரும் பெண்ணுக்கு சரியாக பொருந்தும். ஏனென்றால் ஒரு சிங்கத்தை ஏதோ பூனைக்குட்டியை தூக்கிச் செல்வதுபோல் தூக்கிக் கொண்டு செல்கிறார் அவர். பார்த்தால் உங்களுக்கே செம ஷாக்காக இருக்கும். சிங்கப் பெண் என்றால் தைரியமாக கடினமான காலங்களை எதிர்கொண்டவர்கள் மற்றும் வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இந்த பட்டம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக படித்து பெரிய தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், கணவனை இழந்தபோதும் மனம் தளராமல் பிள்ளைகளை வளர்த்து அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தவர்களுக்கு இந்த அடைமொழி சிறப்பாக பொருந்தும். 

விஜய் படத்தில் கூட அண்மையில் வெளியான படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் செம ஹிட்டானது. தைரியம் மற்றும் வீரத்துக்கு உச்சமாக அடைமொழியாக சிங்கம் கூறப்பட்ட நிலையில், அந்த சிங்கத்தை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பெண்ணின் வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது. அந்த சிங்கம் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்துவிட்டதாக தெரிகிறது. அதனைப் பார்த்த இளம் பெண் ஒருவர் எந்தவித பயமும் இல்லாமல் அந்த சிங்கத்தை கையில் தூக்கிக் கொண்டு செல்கிறார். சிங்கமானது தப்பித்தால் ஓடிவிடலாம் என அங்கும் இங்கும் துள்ளி பார்த்தபோதும் அதனால் முடியவில்லை. அந்தளவுக்கு சிங்கத்தை மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்.

மேலும் படிக்க | அந்த நட்பு மட்டும் இல்லேன்னா.. பல்லியை பதம் பார்க்க நினைத்த பாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

அந்த நேரத்தில் சிங்கத்தின் மைண்ட்வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும் என்றால், தப்பித் தவறி வந்துவிட்டேன், என்னை விட்டுவிட்டால்போதும் என்னுடைய இடத்துக்கே ஓடிவிடுவேன் என்று தான் யோசித்திருக்கும். வைரலாகியிருக்கும் இந்த வீடியோவானது @KuttyPuli_Offcl என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரபட்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிடப்பட்ட மிக குறுகிய காலத்திலேயே பார்த்து ரசித்துள்ளனர். அதில் கமெண்ட் அடித்த சிலரும், சிங்கத்தையே இப்படி டீல் செய்றாங்களே என வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் கொஞ்சம் மன உறுதியும் அசாத்திய திறமையும் வேண்டும் தான் என சிலர் பாராட்டியுள்ளனர். 

மேலும் படிக்க | அய்யய்யோ சிரிப்ப அடக்கவே முடியல.. விலங்குகள் இப்படி கூட செய்யுமா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News