பேஸ்புக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசேனா பிரமுகரின் மகன்! பீதி கிளப்பிய ஃபேஸ்புக் லைவ்!

Vide viral on social media: மும்பைய்ல் அபிஷேக் கோசல்கர்  பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவரால் சுடப்பட்டது, ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் ஒளிபரப்பாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2024, 11:34 PM IST
  • ஃபேஸ்புக் லைவ் நிகழ்ச்சியில் கொலை
  • நேரலையில் அரங்கேறிய கொலை
  • பக்கத்துவீட்டுக்காரரின் வெறி பிடித்த செயல்
பேஸ்புக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசேனா பிரமுகரின் மகன்! பீதி கிளப்பிய ஃபேஸ்புக் லைவ்! title=

மும்பை: சிவசேனா (யுபிடி) தலைவர் வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் வியாழக்கிழமை (பிப்ரவரி 8) பேஸ்புக் நேரலையில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். கிடைத்தத் தகவல்களின்படி, வடக்கு மும்பை புறநகர் பகுதியான தஹிசரில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் இருந்த, அபிஷேக் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.  

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அபிஷேக் கோசல்கர் அவரது பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவரால் சுடப்பட்டதை அந்த வீடியோவில் காண முடிந்தது.

அபிஷேக்கை சுட்டுக் கொன்ற நபர், பிறகு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம், வடக்கு மும்பை புறநகர் பகுதியான தாஹிசரில் நடந்துள்ளது.

போரிவலியில் உள்ள கருணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அபிஷேக், இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை! 

தனது இறுதி நிமிடங்களில் வீடியோவில், அபிஷேக் ஒரு சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.  சில பார்வையாளர்களுடன் பேஸ்புக்கில் நேரலையில் அபிஷேக் பேசுவதைக் காண முடிகிறது. உள்ளூர் வேலைகள் குறித்து பேசிக் கொண்டிருந்த அவர் எழுந்து நின்றபோது, ரிவால்வர் சுடும் சப்தம் கேட்கிறது. குண்டு பட்டதும் அபிஷேக் தடுமாறி கீழே விழுந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அபிஷேக்கின் பக்கத்து வீட்டுக்காரர் மோரிஸ் நோரோன்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் அபிஷேக் கோசல்கரை சுட்டுக் கொன்ற பிறகு தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலை பற்றிய அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் வரவில்லை, ஆனால் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தஹிசரைச் சேர்ந்த முன்னாள் பிஎம்சி முனிசிபல் உறுப்பினர் அபிஷேக் இப்படி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News