பரவச உலகில் இருந்தவரின் பேன்டில் புகுவதற்குபோன நாகப்பாம்பு: வைரல் வீடியோ

வயல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் தன்னிலை மறந்து பரவச உலகில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் பின்னல் திடீரென சென்ற நாகப்பாம்பு பேன்டில் புகுச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 28, 2023, 08:50 PM IST
  • பாம்பை பார்த்த பயந்த நபர்
  • திடீரென உடைக்கு புக முயற்சி
  • பதறியடித்து கீழே விழுந்து தப்பித்தார்
பரவச உலகில் இருந்தவரின் பேன்டில் புகுவதற்குபோன நாகப்பாம்பு: வைரல் வீடியோ title=

சிலருக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்றால் தன்னிலை மறந்துவிடுவார்கள். அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாதளவுக்கு இருப்பார்கள். அப்படி ஒருவர் இருக்கும்போது நாகப்பாம்பு வந்து பேன்டில் புகுவதற்கு முயலும் வீடியோ இப்போது இன்ஸ்டாகிராம் உலகில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே செம காமெடியாகவும், கொஞ்சம் அதிர்ச்சியாகவும் கூட இருக்கலாம். நல்ல வேளை அவருக்கு ஏதும் ஆகாமல் தப்பித்துவிட்டார்.  

மேலும் படிக்க | குரங்கை அடித்தே கொன்ற மனித மிருகம், விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: பதறவைக்கும் வைரல் வீடியோ 

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அறிமுகப்படுத்தியபிறகு மக்களை மகிழ்விக்கக்கூடிய வகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வருகின்றன. விலங்குகள் சார்ந்து வரும் வீடியோக்கள் எந்தவித ஆக்டிங்கும் இல்லாமல் நேர்த்தியாக இருந்தால் அமோக வரவேற்பை பெற்றுவிடுகின்றன. அது பூனை, நாய், யானை சிங்கம், புலி, கரடி, முதலை என எதுவாக இருந்தாலும் இணைய உலகம் விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் நாகப்பாம்பு இரண்டு வயல்வெளி ஓரம் பரவச உலகில் அமர்ந்திருந்தவருக்கு அருகில் சென்ற வீடியோ தான் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்த வீடியோவில் ஒருவர் சாலை ஓரத்தில் இருக்கும் வயலின் வரப்பில் அமர்ந்திருக்கிறார். எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென அங்கு நாகப்பாம்பு ஒன்று வந்துவிடுகிறது. அவருக்கு அருகில் சென்று மேலே ஏற முயற்சிக்கும்போது தான் சுய நினைவுக்கே வருகிறார். அந்த நேரத்தில் பாம்பை பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார். ஒரு பாம்பு தான் வந்தது என்று பார்த்தால் வீடியோவின் இறுதியில் இன்னொரு பாம்பும் இருக்கிறது.  இரண்டு பாம்புகளை பார்த்த அந்த நபர் நிச்சயம் பயத்தின் உச்சத்துக்கே சென்றிருப்பார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

அதேநேரத்தில் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக விஷம் இல்லாத இரண்டு பாம்புகளை வயல் ஓரத்தில் கொண்டு வந்துவிட்டு வேண்டுமென்றே பாம்பை பார்த்ததுபோல் அவர்கள் ஆக்டி செய்திருக்கிறார்கள் என்றும் கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | இது என்ன மாயமா இல்லை மந்திரமா... மலை ஆட்டிடம் தோற்றுப் போன புவி ஈர்ப்பு விசை...! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News