தம்பி கீழ பார்த்து நடக்கக்கூடாதா? பெண்ணை பார்த்து நடந்தவருக்கு நேர்ந்த கதி

மணப்பெண்ணை பார்த்துக் கொண்டு நடந்தவர் குளத்தில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 8, 2022, 01:39 PM IST
  • திருமணத்தில் நடந்த காமெடி
  • வேடிக்கை பார்த்தவருக்கு நேர்ந்த கதி
  • ஷாக்கான மணப்பெண்
தம்பி கீழ பார்த்து நடக்கக்கூடாதா? பெண்ணை பார்த்து நடந்தவருக்கு நேர்ந்த கதி title=

கண்ணுக்கு அழகாக ஏதேனும் தெரிந்து விட்டால்போதும், நம்மையே மறந்து வானத்தில் பறப்போம். பல சமயங்களில் அப்படியான உணர்வுகளை மிதப்பதை உணர்ந்திருப்போம். மற்றவர்கள் அப்படி இருப்பதையும் பார்த்திருக்கக்கூடும். இது ஒரு மகிழ்ச்சியான பீலிங் என்றாலும், அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என கவனிக்காமல் செய்யும் செயல் வேடிக்கையாக அமைந்துவிடும். உதாரணமாக சாப்பிடும்போது கனவு காண்பவர்கள், சாப்பாடு எடுத்து சாப்பிடுவதற்கு பதில், வெறும் கையை மட்டும் சைகை செய்து கொண்டிருப்பார்கள். அல்லது சாப்பாடு எடுக்கும்போது தங்கள் மீது சிந்துவது தெரியாமலேயே இருப்பார்கள். 

மேலும் படிக்க | அடேங்கப்பா! பாம்புகளை குளிக்க வைத்த சிறுமி; வீடியோ வைரல்

இதுபோன்ற சமயங்கள் எதிரில் இருப்பவர்கள் கை கொட்டி சிரிப்பார்கள். அவர்கள் சிரிக்கும்போது தான் நாம் என்ன செய்கிறோம் என்ற ஞாபகமே நமக்கு வரும். அப்படியான ஒரு சம்பவம், இணையத்தில் இப்போது வைரலாகியிருக்கிறது. திருமண வீட்டிற்கு செல்லும் ஒருவர் ஆடம்பரமான உடையில் மணப்பெண்ணும், மணமகனும் நடந்து வருவதை பார்த்து வாயடைத்து போகிறார். அப்படியே அவர்களை பார்த்துவாறு நடந்தும் வருகிறார். அந்த சமயத்தில் அவருக்கு எதிரில் இருக்கும் அழகுக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் குளத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்.

மணமக்களை வேடிக்கை பார்த்தவாறே வரும் நபர், அந்த குளத்திற்குள் தடுக்கி விழுகிறார். பக்காவாக கோட் சூட் அணிந்து வந்த அந்த நபர் திடீரென தண்ணீருக்குள் விழுந்து முழுவதுமாக நனைந்துவிடுவது அங்கிருப்பவர்களை குபீர் சிரிப்பில் ஆழ்த்துகிறது. அவரும் தான் ஒன்றும் செய்யாதது போல், தனக்கு ஏதும் நடக்காதது ஈரத்துணியுடனேயே சென்று காலியாக இருக்கும் நாற்காலி ஒன்றில் அமர்ந்து கொள்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. காண்போருக்கும் சிரிப்பை வரவழைத்துவிடுகிறது இந்த வீடியோ. 

மேலும் படிக்க | மொட்டை மாடியில் மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News