Medical Miracle: 3வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட நோயாளி 5 சிறுநீரகங்களுடன் நலம்!!!!!

நாள்பட்ட சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட நோயாளி மிகவும் அரிய மற்றும் சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இப்போது ஐந்து சிறுநீரகங்களுடன் ஆரோக்கியமாக உள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2021, 11:12 PM IST
  • 3வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட நோயாளி
  • 5 சிறுநீரகங்களுடன் நலம்
  • சென்னை மெட்ராஸ் மருத்துவ மிஷன் மருத்துவமனை சாதனை
Medical Miracle: 3வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட நோயாளி 5 சிறுநீரகங்களுடன் நலம்!!!!! title=

அதிசயம் ஆனால் உண்மை. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. 3 வது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இந்த அபூர்வ நோயாளி தற்போது தனது உடலில் 5 சிறுநீரகங்களுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்.

நாள்பட்ட சிறுநீரக கோளாறால் (kidney failure) அவதிப்பட்ட நோயாளி மிகவும் அரிய மற்றும் சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இப்போது ஐந்து சிறுநீரகங்களுடன் ஆரோக்கியமாக உள்ளார். பிறக்கும்போது அவருக்கு இருந்த இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் அறுவைச்சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட மூன்று மாற்று சிறுநீரகங்கள் அவருக்கு வைக்கப்பட்டுள்ளன.

வங்காளதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நோயாளிக்கு 1994ஆம் ஆண்டில் ஒரு சிறுநீரக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு 2005 ஆம் ஆண்டில் மற்றுமொரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்ததால், அந்த இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. எனவே அவருக்கு டயாலிசிஸ் (dialysis) தொடர்ந்து செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

Read Also | Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR

சென்னை மெட்ராஸ் மருத்துவ மிஷன் மருத்துவமனையில் (Madras Medical Mission) அனுமதிக்கப்பட்டபோது, அந்த நோயாளிக்கு கரோனரி தமனி நோயால் (Coronary Artery Disease) பாதிக்கப்பட்டிருந்தது. எனவே அவருக்கு மூன்று முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவை சுமார் 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன. ஜூலை 10 ஆம் தேதி, எம்எம்எம்மில் வாஸ்குலர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.சரவணன் நோயாளிக்கு மூன்றாவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்தததால், தற்போதுள்ள நான்கு சிறுநீரகங்களை (இரண்டு இயற்கை மற்றும் இரண்டு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டவை) அகற்ற முடியவில்லை.

Read Also | Viral News: வேலைக்கு வாங்க தங்கங்களே! சம்பளம் மட்டுமில்ல தங்கமும் தர்றோம்!

சிறுநீரகங்கள் அகற்றப்பட்டால், நோயாளியின் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும், இது புதிய சிறுநீரகத்தை நிராகரிக்க வழிவகுக்கும். கூடுதலாக, ஏற்கனவே நான்கு சிறுநீரகங்களைக் கொண்டிருந்த உடலில் புதிய சிறுநீரகத்தை வைப்பதில் சிக்கல் இருந்தது என MMM மருத்துவமனை டாக்டர் சரவணன் கூறுகிறார்.  

"சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது, பழைய சிறுநீரகங்கள் காலப்போக்கில் சுருங்கியிருக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட நோயாளியின் உடலில் ஏற்கனவே நான்கு சிறுநீரகங்கள் இருந்ததால், ஐந்தாவதாக ஒரு சிறுநீரகத்தை வைக்க அவரது உடலில் இடமில்லை. எனவே ஐந்தாவது சிறுநீரகத்திற்கான இடத்தை உருவாக்க வேண்டியிருந்தது" என டாக்டர் சரவணன் ஜீ மீடியாவிடம் தெரிவித்தார்.

சிறுநீரகமானது வயிற்று குழியில், குடலுக்கு அடுத்தபடியாக, வைக்க்ப்படும். ஆனால் இந்த நோயாளிக்கு  பெரிட்டோனியத்தின் மேல் புறத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Also Read | இவை பறக்கும் பறவைகள் மட்டுமல்ல, பணக்கார கோடீஸ்வர புறாக்கள்

"டிரான்ஸ்பெரிடோனியல் அணுகுமுறை (குடல் வழியாக), செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் அரிதானது. இதுவரை உலகளவிலும் இதுபோன்ற சிகிச்சைகள் செய்வது அபூர்வம். ஆனால், இந்த நோயாளிக்கு சவாலை எதிர்கொண்டு தான் இந்த அறுவைசிகிச்சை செய்து அவரை காப்பாற்றினோம்" என்று டாக்டர் சரவணன் தெரிவித்தார். 

இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்த பிறகு மூன்றாவது அல்லது நான்காவது மாற்று அறுவை சிகிச்சை எப்போதும் சாத்தியம் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளலாம் என்றும் மருத்துவர் சரவணன் கூறுகிறார். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள உதவியாக இருக்கின்றன.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு போதுமான கண்காணிப்புக்கு பிறகு, ஐந்து சீறுநீரகங்களை கொண்ட நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அறுவை சிகிச்சைக்குப் பின் அவருக்கு முதல் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்தன. அவர் நல்ல முறையில் குணமடைந்து வருகிறார்.

Also Read | Free Petrol: இந்த பெயர் இருந்தால், உங்களுக்கு பெட்ரோல் இலவசம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News