Viral News: வேலைக்கு வாங்க தங்கங்களே! சம்பளம் மட்டுமில்ல தங்கமும் தர்றோம்!

பணியாளர்கள் கிடைக்காததால், தொழில் பாதிக்கப்படும் தொழிலதிபர்கள் புதுவித யுக்திகளை கடைபிடித்து ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2021, 02:10 PM IST
  • சம்பளம் மட்டுமில்ல தங்கமும் தர்றோம்!
  • வேலைக்கு வாங்க பாஸ்
  • வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கு
Viral News: வேலைக்கு வாங்க தங்கங்களே! சம்பளம் மட்டுமில்ல தங்கமும் தர்றோம்!  title=

காலம் மாறிப் போச்சு! வேலை கிடைக்கவில்லை என்று மக்கள் புலம்பிய காலம் போய், வேலைக்கு வாங்கப்பா என்று வெற்றிலை பாக்கு வைக்காத குறையாய் வேலைக்கு ஆள் தேடும் காலமாகிவிட்டது.

என்ன? எங்கே? எனக்கு வேலை குடுங்க என வேலை தேடும் நபரா நீங்கள்? உடனே வேலை ரெடியா இருக்கு…. கிளம்புங்க திருப்பூருக்கு...

திருப்பூர் பின்னல் ஆடைகள் மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற தொழில் நகரம். இங்கு உள்ள ஆடை தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் எப்போதுமே தயாராக இருக்கும். எனவே, வேலை தேடி ஒரு காலதில் மக்கள் சென்னைக்கு படையெடுப்பதால், சென்னை மாநகரம் ‘வந்தாரை வாழ வைக்கும்’ சிங்கார சென்னை என்ற பெயர் பெற்றது.

தற்போது பல ஊர்களில் வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், திருப்பூர் வேலை தேடுபவர்களுக்கு ஒரு சொர்க்க பூமியாகவே உள்ளது. ஆனால், வேலைக்கு தான் ஆட்கள் கிடைப்பது அருகிவிட்டது. பணியாளர்கள் கிடைக்காததால், தொழில் பாதிக்கப்படும் தொழிலதிபர்கள் புதுவித யுக்திகளை கடைபிடித்து ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர்.

Also Read | நீச்சல் குளத்தில் விழுந்த புகைப்படக்காரர் - மணப்பெண் மணமகன் அதிர்ச்சி

தையல்வேலைக்கு ஆட்கள் வந்தால், தங்க மோதிரம் பரிசு தருகிறோம் என்று சொல்கின்றனர் ஒரு பின்னலாடை நிறுவனத்தினர்.  பின்னலாடைத் தயாரிப்பில் ஓவர்லாக் செய்வது மிகவும் அவசியமான ஒன்று.  

தொழில்முறை ஓவர்லாக் தையல்காரர்களின் கடுமையான பற்றாக்குறையால், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலை உரிமையாளர் தனது நிறுவனத்தில் எட்டு மாதங்கள் பணிபுரியும் தையல்காரருக்கு தங்க மோதிரம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இது வழக்கமாக கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் பிற சலுகைகளுக்கு மேலதிக கூடுதல் சலுகை என்பது குறிப்பிடத்தகக்து.
 
ஆடை தொழிற்சாலை உரிமையாளரான குமார் என்பவர் தான் இந்த புதுவித அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்த ஆர்டர்களைப் பெற்று ஆடை தயாரித்து வழங்கும் பணியில் இவர் ஈடுபட்டிருக்கிறார்.  தற்போது, திறமையான ஓவர்லாக் தையல்காரர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதால் தொழிலில் சிரமம் ஏற்படுவதாக சொல்கிறார்.

Also Read | வினோத வழக்கு: இறந்த மகனின் விந்தணுவை திருப்பித் தருமாறு மருமகளிடம் கேட்கும் மாமியார்

வாரந்தோறும் 6000 ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதில்லை என்று சொல்லும் அவர், வேலைக்கு சேர்பவர்கள் சில நாட்களிலேயே வேலையில் இருந்து நின்றுவிடுவதாக சொல்கிறார்.

பொதுவாக ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாராந்திர சம்பளம் என்பதால், ஒரு வாரம் வேலை செய்துவிட்டு, அதிகம் சம்பளம் கிடைத்தால் வேறு இடங்களுக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் பல தொழிற்சாலைகளிலும் பணியாளர் பிரச்சனை இருக்கிறது.

திருப்பூர் தென்னிந்தியாவில் ஆடை ஏற்றுமதியின் முக்கிய மையமாக இருக்கும் திருப்பூரில் இருந்து பல பிரபலமான பிராண்டுகளுக்கு ஆடை உற்பதி செய்து அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து அவுட்சோர்சிங் மூலம் இந்த பணிகள் செய்யப்படுகின்றன.

Also Read | அனைவருக்கும் முன்னால் மணப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!

திருப்பூர் ஆண்டிபாளையத்தில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி ஆலையை நடத்தி வரும் குமார், தொழில்முறை ஓவர்லாக் தையல்காரர்களின் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார். ஆடை ஏற்றுமதித் தொழிலில் காலக்கெடு முக்கியம்.

வேலைக்கு ஆட்கள் ஒழுங்காக வராவிட்டால், பெருத்த நட்டம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளால் ஆர்டர்களை எடுக்க முடியாமல் தவிக்கும் குமார், இதற்காக ஒரு உத்தியை உருவாக்கினார். குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் தன்னிடம் பணிபுரியும் ஓவர்லாக் தையல்காரருக்கு தங்க மோதிரத்தை வழங்கும் திட்டத்தை வெளியிட்டார். இதற்கான விளம்பரத்தை திருப்பூர் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்.

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தங்க மோதிர திட்டமும் குமாருக்கு பயனளிக்கவில்லை. அப்படி என்றால், வேலையாட்கள் பற்றாக்குறையின் நிலையை நினைத்துப் பாருங்கள்!

குமாரைப் போலவே, திருப்பூரில், தையல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் வேலையாட்களை ஈர்க்க சலுகைகளை வழங்குகின்றனர். ஒரு தொழிற்சாலை உரிமையாளர் தொலைதூர கிராமங்களில் இருந்து வேலைக்கு வரும் ஓவர்லாக் தையல்காரர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் கொடுக்கிறார்.

Also Read | கர்ப்பிணி மனைவியை சுமந்து கொண்டு தீ மிதிக்கும் கணவன்மார்கள்; காரணம் என்ன..

மற்றொருவர் தொழிலாளர்களுக்கு மதுபானம் கொடுக்கிறார். ஆனால் பிற சலுகைகளுக்கு எழாத எதிர்ப்பு, மதுபானம் கொடுத்தபோது எழுந்தது. எனவே அவர் அந்த சலுகையை கைவிட வேண்டியிருந்தது.

இதுபோன்ற விளம்பர யுக்திகளை சிறிய அளவிலான தொழிற்சாலை வைத்திருப்பவர்கல் தான் செய்வார்கள் என்று சொல்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம். இந்த வித்தியாசமான சலுகைகள் சில நேரங்களில் தையல்காரர்களின் பற்றாக்குறையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.  ஒருபோதும் பெரிய நிறுவனங்கள் இப்படி செய்வதில்லை என்று கூறுகிறார்.

ஆனால், இதிலிருந்து என்ன புரிகிறது? வேலைவாய்ப்பு இல்லை என்று பலர் கவலைப்பட்டாலும், வேலைக்கு ஆள் இல்லாமல் திண்டாடும் நிலையும் இருக்கிறது. எனவே தேவைக்கு ஏற்றாற்போல் திறமையை வளர்த்துக் கொண்டால் வேலைவாய்ப்புகளுக்கு என்றும் பஞ்சமில்லை…

Also Read | Food:இதென்ன கொடுமை சார்! இட்லி தோசைக்கு வந்த சோதனை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News