குழந்தையிடம் போனை பிடுங்கி பிடுங்கி விளையாடும் குரங்கு: வைரல் வீடியோ

இந்த வீடியோ இணைய வாசிகளைக் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் ஒரு சிறுமியும் ஒரு குரங்கும் மொபைல் போனுக்காக கியூட்டாக சண்டையிடுவதை நாம் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 8, 2023, 04:55 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போது வைரல் ஆகியுள்ள இந்த வீடியோவைப் பார்த்து புன்னகை பூக்காமல் இருக்க முடியாது.
  • ஒரு குரங்கும் ஒரு குழந்தையும் இருக்கும் இந்த வீடியோ மிகவும் கியூட்டாக உள்ளது.
குழந்தையிடம் போனை பிடுங்கி பிடுங்கி விளையாடும் குரங்கு: வைரல் வீடியோ title=

குரங்கின் இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என கூறுகின்றனர்.

மேலும் படிக்க | கண்ணாடி பார்த்து கன்பியூஸ் ஆன குரங்கு: குலுங்கி குலுங்கி சிரிப்பீங்க, வைரல் வீடியோ

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. கோயில்களில் கூட குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனினும், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ, சற்று வித்யாசமானது என்றே கூறலாம். 

இந்த வீடியோவில் ஒரு குரங்குக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் இடையில் நடக்கும் ஒரு வேடிக்கையான சம்பவத்தைக் காண முடிகின்றது. இதைக் கண்டால் யாராலும் மகிழ்சியடையாமலோ, சிரிக்காமலோ இருக்க முடியாது. இந்த வைரல் வீடியோ பழையதாக இருந்தாலும் தற்போது இந்த வீடியோவானது மீண்டும் இணைய வாசிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் ஒரு சிறுமியும் ஒரு குரங்கும் மொபைல் போனுக்காக கியூட்டாக சண்டையிடுவதை நாம் காணலாம்.  இந்த வீடியோவில் ஒரு சிறு பெண் குழந்தை ஒரு கட்டிலில் அமர்ந்து ஸ்மார்ட்போனைப் பார்ப்பதைக் காண்கிறோம். அப்போது ஒரு குரங்கு அந்த குழந்தையின் அருகில் வருகிறது. பின்னர், அக்குரங்கு குழந்தையிடமிருந்து தொலைபேசியைப் பறிக்கிறது. குழந்தை அதை உடனடியாக குரங்கிடமிருந்து மீண்டும் பறித்துக்கொள்கிறது. குழப்பமடைந்த குரங்கு மீண்டும் எந்த போனை குழந்தையிடமிருந்து பிடுங்கி அதை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.

குழந்தையிடம் போனை பிடுங்கி விளையாடும் குரங்கின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 குரங்கின் இந்த வேடிக்கையான வீடியோ jagadeesh_madineni என்கிற இனஸ்டாகிராம் பயனரால் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை இணைய வாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளையும், எமோஜிக்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இந்த இடுகையை மில்லியன் கணக்கான பயனர்கள் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு சுமார் 1.43 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நாய்க்காக சிறுவன் செய்த வேலை: ‘அந்த பையன் காவாலா’..நெகிழும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News