பிரபுதேவாவுக்கு டஃப் கொடுக்கும் பாட்டி: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

Funny Viral Video: இப்படி ஒரு நடனத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது. பாட்டி ஒருவர் ஆடும் மாஸ் நடனம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 15, 2023, 07:11 AM IST
  • ஹரியான்வி பாட்டியின் இந்த நடன வீடியோ @GaurangBhardwa1 என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்று வருகிறது.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
பிரபுதேவாவுக்கு டஃப் கொடுக்கும் பாட்டி: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

நடனம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பதிவேற்றப்படுகின்றன. சில நேரங்களில் குழந்தைகளும், சில சமயங்களில் பெரியவர்களும் தங்களது அற்புதமான நடன அசைவுகளால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். ஆனால், சில சமயங்களிலோ நாம் எதிர்பாராத வண்ணம் பல முதியவர்கள் கூட நடனத்தில் ஒரு கை பார்ப்பதுண்டு. அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் இந்த நடனங்கள் இருக்கும். 

அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஒரு வயதான மூதாட்டி ஹரியான்வி பாடலுக்கு மாஸாக நடனமாடும் வீடியோதான் இது. ஹரியான்வி பாடல்களுக்கென்று ஒரு மகத்துவம் உள்ளது. இதை கேட்டால் மக்கள் தாமாக நடனமாடத் தொடங்குகிறார்கள். அதுவும் நடனத்தில் மிக ஆர்வம் உள்ள இந்த மூதாட்டி பற்றி கேட்கவே வேண்டம். 

இந்த வீடியோவில், பலர் ஒரு இடத்தில் கூடி இருப்பதை காண முடிகின்றது. அங்கு ஹர்யாண்வி பாடல் ஒலிக்கிறது. பலரது ஆசைக்கிணங்க அந்த மூதாட்டி நடனமாடத் தொடங்குகிறார். ஆனால், போகப்போக அவர் தனது விசித்திரமான நாட்டியத்தில் ஒன்றி விடுகிறார். அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் திகைத்துப் போவதையும் வீடியோவில் காண முடிகின்றது. இவரது நடனத் திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

திறமையை வெளிக்காட்டிய மூதாட்டி

வைரலாகி வரும் இந்த வீடியோவில், இந்த காட்சி ஒரு கிராமத்தின் காட்சி என்பது தெரிகிறது. ஒரு இடத்தில் கூடியுள்ள பெண்கள் ஒரு பாட்டியிடம் நடனம் ஆடும்படி கேட்கிறார்கள். பாட்டியும் யாரையும் ஏமாற்றாமல் நடனம் ஆடத் தொடங்குகிறார். இரண்டு கைகளாலும் அவர் கால்களைப் பிடித்துக்கொண்டு குட்டிக்கரணம் போடத் தொடங்குகிறார். தொடங்கியதுதான் தாமதம், அவரது ஆர்வம் சூடு பிடித்தது. அவர் யார் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து நடனமாடுகிறார். இவரின் இந்த திறமையை பார்த்து அங்கிருந்த பெண்கள் அனைவரும் வியப்படைகின்றனர்.

மேலும் படிக்க | பாம்பு கறி செய்த பாட்டி: இணையத்தை ஒரு கலக்கு கலக்கிய மூதாட்டி, வைரல் வீடியோ

பாட்டியின் மாஸ் நடன வீடியோவை இங்கே காணலாம்:

ஹரியான்வி பாட்டியின் இந்த நடன வீடியோ @GaurangBhardwa1 என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்று வருகிறது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து  வருகிறார்கள். 

மேலும் படிக்க | பொண்ணு ஆடிய ஆட்டத்துக்கு மேடையே பத்திக்கிச்சு: வேற வெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News