பாம்பு என்ற பெயரை கேட்டாலே அந்த இடத்தை விட்டு ஓடுபவர்களே பலர் உள்ளனர். பாம்பின் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். விலங்கு வகைகளில் பாம்புகளுக்கு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இடம் உள்ளது. பாம்புகள் காலம் காலமாக மனித இனம் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாத விலங்கு வகையாக இருந்து வருகின்றன. மேலும், இவற்றின் மீதான ஈர்ப்பும் மக்களுக்கு குறையவில்லை.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பின் சத்தம் கேட்டாலே ஓடிப்போய் ஒளிந்துகொள்ளவே நம்மில் பெரும்பாலானோருக்கு தோன்றும். பாம்புகள் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. இவற்றில் பாம்பு பிற உயிரினங்களை வேட்டையாடுவதையும், பாம்பின் மீது மனிதனுக்கு உள்ள அச்சத்தையும்தான் நாம் பெரும்பாலும் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
மூதாட்டி ஒருவர் மிக அசால்டாக பாம்பு கறி செய்யும் வீடியோ யூடியூபில் வெளிவந்துள்ளது. இந்த பாம்பு கறியை அவர் செயல்முறை விளக்கத்தோடு செய்கிறார். ஒவ்வொரு இடத்திலும் உள்ள மக்களின் கலாச்சாரம் மற்றும் ரசனைக்கு ஏற்ப உணவு வகைகள் வேறுபடுகின்றன. வெவ்வேறு நாடுகளில் சைவம், அசைவம் என பலவிதமான பதார்த்தங்கள் சமைக்கப்படுகின்றன. இதில் பாம்பு கறி உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபலமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் பாம்பு இறைச்சியை சமைப்பது மட்டுமல்லாமல், அதை விரும்பி உண்ணும் நபர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
இந்த வீடியோவில் காணப்படும் மூதாட்டியின் சமையல் வீடியோக்கள் யூடியூப் முழுவதும் உள்ளன. இதில் அவர் பாம்பு கறி சமைக்கும் வீடியோ மீண்டும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் அந்த மூதாட்டி, துணைக்கு ஒரு ஆளை வைத்துக்கொண்டு பாம்பு கறி செய்கிறார். முதலில் அவர் பாம்பின் தோலை உரித்து, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்களைப் பூசுவதைக் காண முடிகின்றது. பின்னர் பாம்பு கறி சமைப்பதற்காக வெங்காயம், மிளகாய், பூண்டு, இஞ்சி என ஒவ்வொன்றாக நறுக்கி தயார் செய்கிறார். கடாயில் எண்ணெய் சூடானதும், மசாலா அனைத்தையும் அரைத்து, தோலுரித்த பாம்பை அதில் போடுகிறார். சமைத்த பிறகு, வயதான பெண்மணி ஒரு பெரிய இலையில் பாம்பு கறியை பலருக்கு வழங்குகிறார். இந்த ருசியான பாம்பு கறியை அவர்கள் அனவரும் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவதை வீடியோவில் காண முடிகின்றது.
மேலும் படிக்க | பொண்ணு ஆடிய ஆட்டத்துக்கு மேடையே பத்திக்கிச்சு: வேற வெவல் வைரல் வீடியோ
பாம்பு கறி செய்யும் பாட்டியின் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோவில் காணப்படும் மஸ்தானம்மா என்ற மூதாட்டி ஆந்திராவை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. இறக்கும் போது அவருக்கு வயது 105 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் வரை பார்க்க முடிந்தாலும், அவர் தனது செவித்திறனை இழந்தார். 100 வயதை எட்டிய பிறகும், யூடியூப்பில் மிகவும் பிரபலமாக இருந்தார். பாரம்பரிய சமையலைத் தவிர, பல்வேறு வகையான சமையலிலும் அவர் கைதேர்ந்தவர்.
பாம்பு கறி போன்ற உணவு வகைகள் பிற நாடுகளில் பிரபலமாக இருந்தாலும், இந்தியாவில் தமிழ்நாடு, நாகாலாந்து மற்றும் ஜார்கண்ட் போன்ற சில இடங்களில்தான் சமைக்கப்படுகின்றன. நாகாலாந்து மக்கள் பாம்பு இறைச்சியை மிகவும் விரும்பி உண்கின்றனர். பாம்பு இறைச்சி தங்களின் காயங்களை ஆற்றவும் கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
பாம்பை பார்த்தால் அனைவரும் பயந்து ஓடும் இந்த உலகில், பாட்டி ஒருவர் அதன் தோலை உரித்து மசாலாக்களுடன் அதை வைக்து கறியே செய்து அசத்தும் வீடியோ இணையவாசிகளை பெரிய வகையில் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ