தாத்தாவுக்கு கல்யாணம்: இணையத்தின் இளசுகளை கடுப்பேற்றும் முதியவர்.. வைரல் விடியோ

Funny Wedding Video: இந்த வீடியோவை பார்த்தால், என்ன நடக்கிறது என்றே முதலில் புரிந்துகொள்ள முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2023, 12:20 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் arfat_sikdar என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
தாத்தாவுக்கு கல்யாணம்: இணையத்தின் இளசுகளை கடுப்பேற்றும் முதியவர்.. வைரல் விடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

சமூக ஊடகங்களில் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இவற்றில் சிலவற்றை பார்த்தால் நம்மால் நமது ஆசரியத்தை அடக்க முடியாது. திருமண வீடியோக்களுக்கு இணையத்தில் ஏகப்பட்ட மவுசு உள்ளது. திருமணத்தில் நடக்கும் பல்வேறு வேடிக்கைகள், கேலி, கிண்டல்கள், மணமக்களுக்கு இடையில் உள்ள பாசம், சண்டை, உறவினர்கள் செய்யும் அட்டகாசம் என இவை அனைத்தும் இந்த வீடியோக்களில் காணப்படுகின்றன. 

நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. 

தற்போதும் ஒரு திருமண வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் இது எப்படி சாத்தியமாகும் என நமக்கு நினைக்கத்தோன்றும். இந்த வீடியோவில் வயதான ஒருவர் தன்னை விட பல வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இது எப்படி நடக்கிறது என்பது தான் அதில் உள்ள ஆச்சரியமே!! 

வயதான மனமகன் இளம் மணமகள்

இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு இளம் பெண் மணமகளின் உடையில் காணப்படுவதையும், அவருக்கு அருகில் நிற்கும் முதியவர் மணமகனின் உடையில் இருப்பதையும் காண முடிகிறது. முதியவர் ஷெர்வானி அணிந்த மாப்பிள்ளையின் கெட்டப்பில் காணப்படுகிறார். வீடியோவைப் பார்த்தால் எப்படி இந்த ஜோடி அமைந்தது என நமக்கு வியப்பாக உள்ளது. 

வயதான மணமகன் தனது திருமணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகின்றது. ஆனால், மணமகளும் எந்த வித வருத்தமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதுதான் இன்னும் வியப்பாக உள்ளது. இருவரின் குடும்ப உறுப்பினர்களும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டு இருக்கிறர்கள். இருப்பினும், இந்த நாட்களில் இதுபோன்ற பல வீடியோக்கள் இணையத்தில் காணப்படுகின்றன. இவை வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட வீடியோவாகவும் இருக்கலாம். எனவே இந்த வீடியோவை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும் படிக்க | முட்டையை அபேஸ் செய்ய வந்த பெண்: பின்னிப்பெடலெடுத்த தாய் மயில்..வைரல் வீடியோ

அதிசய ஜோடியின் ஆச்சரிய வீடியோவை இங்கே காணலாம்:

 

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் arfat_sikdar என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | ’யப்பா என்ன சுகம்’ சாலையில் மல்லாக்க படுத்த நாய் - என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News