’யப்பா என்ன சுகம்’ சாலையில் மல்லாக்க படுத்த நாய் - என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ

சாலையில் உரிமையாளருடன் வாக்கிங் வந்த நாய்க்குட்டி திடீரென நடுரோட்டில் படுத்துக் கொண்டு செய்த லூட்டி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2023, 10:14 PM IST
  • வாக்கிங் வந்த நாய்
  • சாலையில் படுத்து லூட்டி
  • கடுப்பான உரிமையாளர்
’யப்பா என்ன சுகம்’ சாலையில் மல்லாக்க படுத்த நாய் - என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ title=

விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில காணொளிகளைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது. அப்படியான ஒரு நாயின் வீடியோ இணையத்தில் பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளருடன் வாக்கிங் வந்த நாய் திடீரென நடு சாலையில் படுத்துக் கொண்டது. அத்துடன் அங்கிருந்து நகரமாட்டேன் என அடம்பிடித்துவிட்டது. உரிமையாளர் என்ன செய்ய முயற்சித்தும் நாய் அங்கிருந்து நகரவில்லை. அப்புறம் கடுப்பான உரிமையாளர் நாயை அழைத்துச் செல்ல செய்த செயல் தான் ஹைலைட். 

மேலும் படிக்க | முடியை பிடித்து இழுத்த குரங்கு, குழந்தையின் நிலை? பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ

நடுரோட்டில் படுத்த நாய்

ஒருவர் தனது செல்ல நாயுடன் சாலையில் நடந்து செல்வது வீடியோவில் தெரிகிறது. சாலையின் நடுவில், நாய் தனது கால்களை உயர்த்தி சாலையில் படுத்திருக்க, நாயுடன் வந்த உரிமையாளர் தனது நாயைத் தூக்க முயற்சிக்கிறார். பெல்ட்டைப் பிடித்து இழுக்க முயற்சித்தாலும், நாய் அசையவில்லை. சிறிது நேரம் கழித்து, நாய் நிமிர்ந்து, இப்போது நடக்கத் தயாராக இருப்பதாக உரிமையாளர் உணர்ந்தார். ஆனால் அவர் நடக்க முயற்சித்தவுடன், நாய் மீண்டும் தரையில் அமர்ந்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அங்கிருந்தவர்கள் சிரிப்பது வீடியோவில் கேட்கிறது. இறுதியில், அந்த மனிதர் நாயை கையில் எடுத்துக்கொண்டு ஓடினார்

சோஷியல் மீடியா ரியாக்ஷன்

இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பலரது கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதனால்தான் ஒவ்வொரு நாய் உரிமையாளரையும் உற்சாகப்படுத்த எப்போதும் ஏதாவது ஒன்றை பாக்கெட்டில் வைத்திருக்கச் சொல்கிறேன் என்று ட்விட்டர் பயனர் ஒருவர் எழுதினார். எனது நாயும் அவ்வாறே செய்கிறது என்று மற்றொரு பயனர் எழுதினார். இந்த நாய் நடந்து சோர்வாக இருக்கிறது அநேகமாக, இப்போது அதற்கு நடக்கக்கூடிய திறன் இல்லை என்று மற்றொருவர் எழுதினார், 

இந்த வீடியோ @buitengebieden ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது இதுவரை சுமார் 8 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. இந்த காணொளிக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | நம்பவே முடியாது: முதலைகளிடம் மாட்டிய குரங்கின் உயிர் போராட்டம்... திகிலூட்டும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News