மனித காதலை மிஞ்சும் மயிலின் காதல்: நெட்டிசன்களின் இதயத்தை கனமாக்கிய வைரல் வீடியோ

இணையத்தில் வைரல் ஆகியுள்ள இந்த வீடியோவால், மனம் இளகியுள்ள இணையவாசிகள், மயிலின் பாசத்தை வியந்து பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 5, 2022, 12:43 PM IST
மனித காதலை மிஞ்சும் மயிலின் காதல்: நெட்டிசன்களின் இதயத்தை கனமாக்கிய வைரல் வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனினும், இந்த வீடியோவைப் பார்த்தால், பார்ப்பவர்களால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு உருக்கமான வீடியோதான் இணையவாசிகளின் இதயங்களை தற்போது துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நம் வாழ்வில் அனைவருக்கும் ஒரு துணை கண்டிப்பாகத் தேவைப்படுகின்றது. அந்த துணை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். துணையாக இருப்பவர் பிரிந்து சென்றால், துயரம்தான். அதுவும் அந்த துணை கணவன் / மனைவியாகவோ, காதலன் / காதலியாகவோ இருந்தால், துயரத்தின் அளவு உச்சம் தொடும்!!

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் என அனைத்துக்கும் இந்த பிரிவின் துயரம் உண்டு. இந்த காணொலியிலும், பிரிவின் துயரத்தால் வாடும் ஒரு மயிலைத் தான் நாம் காண்கிறோம். 

இந்த வீடியோவை (Viral Video), பிரவீண் காஸ்வான் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நான்கு ஆண்டுகளாக இரு மயில்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளன. அவற்றில் ஒரு மயில் இறந்து விடுகிறது. அதை தகனம் செய்ய கிராமவாசிகள் எடுத்துச்செல்லும்போது, அவர்களுடனேயே சென்ற மற்றொரு மயில் இறந்த மயிலின் இறுதிச்சடங்குகளிலும் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

ALSO READ | டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை பலமுறை எட்டி உதைத்த காவல்துறை -Viral Video

இதயத்தை கனமாக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

பாசம், நேசம், காதல், அன்பு என அனைத்து உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டு, தன்னுடன் வாழ்ந்த தனது துணை இறந்துவிட்டதை அந்த மயிலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறந்த மயிலை இருவர் எடுத்துச்செல்ல, இந்த மயில் அவர்களை பின்தொடர்ந்து, இறந்த மயிலின் பின்னாலேயே செல்வதைப் பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. 

இணையத்தில் வைரல் ஆகியுள்ள இந்த வீடியோவால், மனம் இளகியுள்ள இணையவாசிகள், மயிலின் (Peacock) பாசத்தை வியந்து பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ALSO READ | கல்யாண பொண்ணா இருந்தா என்ன? நமக்கு சாப்பாடுதான் முக்கியம்!! வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News