Watch: நடுரோட்டில் நடனமாடி ஆச்சரியத்தை ஏற்படுத்திய பாட்டி

வயதான பெண்மணி ஒருவர், வாகனங்கள் தொடர்ந்து வந்து செல்லும் நெரிசல் மிகுந்த சாலையில் மெய் மறந்து டான்ஸ் ஆடுவதை வீடியோவில் காணலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2022, 05:26 PM IST
  • நடுரோட்டில் அசத்தலாய் நடனமாடிய பாட்டி.
  • பாட்டியின் நடனம் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
  • நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
Watch: நடுரோட்டில் நடனமாடி ஆச்சரியத்தை ஏற்படுத்திய பாட்டி title=

டான்ஸ் வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் "தேசி அம்மா" வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரோட்டில் வயதான பாட்டி நடனம் ஆடிய விதத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். வயதான பெண்மணியின் நடன வீடியோவை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் திறமையை பார்த்து பாராட்டி வருகின்றனர். 

இந்த வீடியோவைப் (Dance Video) பார்த்த பிறகு, நீங்கள் நிச்சயமாக, "இந்த வயதிலும் இவ்வளவு அழகா நடனம் ஆடுகிறார்" என மகிழ்ச்சி அடைவீர்கள்.

குழந்தையாக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி, தான் சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போதெல்லாம் ஒவ்வொருவரும் அவர் அவருக்கான பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வயதான பாட்டியின் நடனத்தை பார்க்கும் போது அப்படி தான் நினைக்க தோன்றுகிறது.

ALSO READ | இணையத்தில் வைரலாகும் புதுமணப்பெண்ணின் நடனம்!

அவரின் நடன அசைவு, வேகம் மற்றும் உற்சாகத்தை பார்க்கும் போது, ஏதோ ஒரு புதையல் அகப்பட்டது போல் இருக்கிறது. வாகனங்கள் தொடர்ந்து வந்து செல்லும் நெரிசல் மிகுந்த சாலையில் மெய் மறந்து டான்ஸ் ஆடுவதை வீடியோவில் (Viral Video) காணலாம். மிகவும் ஆர்வத்துடன் நடனமாடும் அவருடன் இன்னும் சிலரும் நடனமாடுகிறார்கள். 

பாட்டியின் கியூட்டான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'புட்னி_கே_மீம்ஸ்' (bhutni_ke_memes) என்ற பெயரில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவை சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். 

ALSO READ | வைரலாகும் SpiceJet விமான பணிப்பெண்ணின் நடன வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News