Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்!

Viral Video: திருமண மேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது, மணப்பெண் செய்ய செயலால் மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 22, 2024, 07:29 AM IST
  • மணமகள் செய்த அதிர்ச்சி செயல்.
  • அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்.
  • வீடியோ இணையத்தில் வைரல்.
Viral Video: மேடையில் சாமியாடிய மணப்பெண்! அலறியடித்து ஓடிய மணமகன்! title=

Viral Video: சமீபத்தில் திருமண மேடையில் நடைபெற்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் மேடையில் உள்ளனர். ஆனால் திடீர் என்று மணமகள் அங்கிருந்த அனைவரையும் அலறி அடித்து ஓட செய்துள்ளார். திருமண விழாக்களில் மாலை மாற்றிக்கொள்வது சம்பர்தாயம் ஆகும். ஆனால், ஒரு திருமண விழாவில் மணமக்கள் மேடையில் மாலை மாற்றிக் கொண்ட வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மணப்பெண்ணின் ரியாக்ஷனை பார்த்து அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடி உள்ளனர். 

மேலும் படிக்க | பாம்புகள் காதலிகளுடன் க்ரூப் டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா..!!

17 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில், திருமணத்திற்காக மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. மணமகனை சுற்றிலும் உறவினர்கள் நிற்கிறார்கள். மணமகன் மணப்பெண்ணிற்கு மாலை அணிவிக்க வருகிறார். அப்போது சோபாவில் அமர்ந்து இருந்த மணமகள் திடீரென்று மாப்பிள்ளையை பார்த்து கண்களை மேலேயும் கீழேயும் பாராது சத்தமாக சிரிக்க தொடங்குகிறார். இதனை பார்த்த அங்கிருந்த மக்கள் பயந்து ஓடுகின்றனர். பின்னர் மணமகள் முடியை விரித்துப்போட்டு கத்த தொடங்குகிறார். இதனை பார்த்து பயந்து போன மணமகன் பயந்து சோபாவின் பின்னால் செல்லும் சூழல் ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சியான வீடியோ X தளத்தில் RaviShanka என்ற நபர் வெளியிட்டுள்ளார். இதுவரை இந்த வீடியோவை 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவிற்கு நூற்றுக்கணக்கான பயனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் மாதாஜி வந்துவிட்டார் என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் மக்கள் பார்வைக்காக எல்லா வகையான விஷயங்களையும் செய்கிறார்கள்! எனினும், இந்த வீடியோ எப்போது, ​​எங்கு படமாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சில பயனர்கள், மணமகன் காப்பாற்றப்பட்டார்! என்று கமெண்ட் செய்துள்ளனர். உண்மையில், மணமகன் அந்த பெண்ணுக்கு மாலை போடுவதற்கு அருகில் சென்ற போது வித்தியாசமான ரியாக்சன் கொடுத்துள்ளார். பின்பு மணமகள் விசித்திரமான செயல்களைச் செய்யத் தொடங்குகிறார். சாமி வந்தது போலும் அல்லது பேய் பிடித்தது போலும் நடந்து கொண்டார். சிலர் இந்த வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

மேலும் படிக்க | ஆழ்கடலில் 93 நாள் குடித்தனம்.... 10 வயது இளமையாக மாறிய அதிசயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News